செய்திகள் :

அஜித்: ``சினிமா, ரேஸிங் இரண்டையும் என் குழந்தைகள் மீது திணிக்க மாட்டேன், ஆனால்'' - நடிகர் அஜித்

post image

நடிகர் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார். நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர்.

‛குட் பேட் அக்லி' படத்தை தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

துபாய், பெல்ஜியம் நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயங்களில் ‛அஜித்குமார் ரேஸிங்' அணி பங்கேற்றிருக்கிறது.

ரேஸில் 3-ம் இடம்பிடித்த அஜித் அணி
ரேஸில் 3-ம் இடம்பிடித்த அஜித் அணி

இந்நிலையில் நேற்று (செப்.28) நடந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்தின் அணி, 3-ம் இடம் பிடித்து சாதித்திருக்கிறது.

3-ம் இடத்தைப் பிடித்த அஜித்குமார் அணிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அஜித்குமார் 'India Today'-விற்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் ஷாலினி குறித்து பேசியிருக்கும் அஜித், " ஷாலினி கையாளும் விஷயங்கள் ஏராளம்.

அவருடைய ஆதரவு இல்லையென்றால், இதையெல்லாம் என்னால் செய்ய முடியாது. நான் இல்லாதபோது அவர்தான் வீட்டையும், குழந்தைகளையும் கவனித்துக்கொள்கிறார்.

குழந்தைகள் என்னைப் பார்ப்பது அரிது, அவர்கள் என்னை மிஸ் செய்வது போலவே நானும் அவர்களை மிஸ் செய்கிறேன். நீங்கள் நேசிக்கும் ஒன்றை செய்ய நினைத்தால் சில நேரங்களில் தியாகங்களை செய்துதான் ஆக வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

Ajith Family
Ajith Family

தொடர்ந்து தனது மகன் ஆத்விக் குறித்து பேசிய அஜித், " எனது மகனுக்கும் கார் ரேஸிங் பிடிக்கும். அவன் கோ-கார்ட்டிங் தொடங்கியிருக்கிறான். ஆனால் அதில் அவன் இன்னும் அதிக கவனம் செலுத்தவில்லை.

சினிமாவாக இருந்தாலும் சரி, ரேஸிங்காக இருந்தாலும் சரி என் கருத்துக்களை குழந்தைகள் மீது திணிக்க நான் விரும்பவில்லை. அவர்கள் எதை செய்ய விரும்புகிறார்களோ அதற்கு நான் ஆதரவு தெரிவிக்க விரும்புகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

காயம் ஏற்படுது அதனால நடிக்காதீங்கன்னு யாரும் சொல்லல; அதே மாதிரிதான் மோட்டார் ஸ்போர்ட்ஸும் - அஜித்

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார் நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர். ‛குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். துபாய், பெல... மேலும் பார்க்க

அஜித்: ஸ்பெயினிலும் அசத்திய அஜித் ரேஸிங் அணி; 3-ம் இடம் பிடித்து சாதனை - குவியும் வாழ்த்துகள்

நடிகர் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார், நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர். 'குட் பேட் அக்லி' படத்தை தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். துபா... மேலும் பார்க்க

'கரூரில் எனக்கு எந்த ஒரு நண்பரும் இல்லை; வதந்திகளைப் பரப்பாதீர்கள்'- கயாடு லோஹர் விளக்கம்

"என் ஆழ்ந்த இரங்கலை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். தவெகவின் சுயநல அரசியலுக்காக கரூர் கூட்டத்தில் நான் மிகவும் நெருங்கிய நண்பரை இழந்துவிட்டேன். விஜய், மக்கள் உங்கள் நட்சத்தி... மேலும் பார்க்க

கரூர் துயரம்: ``இனி ஒரு உயிர்கூட போகக் கூடாது" - நடிகர் வடிவேலு, சூரி உருக்கம்

நேற்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்த நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ச... மேலும் பார்க்க

கரூர் துயரம்: ``குறைந்தபட்சம் இதையாவது செய்யுங்கள்'' - விஜயிடம் நடிகர் விஷால் வைத்த கோரிக்கை

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்த நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்ப... மேலும் பார்க்க

கரூர் துயரம்: ``எப்படி தேற்றுவது தெரியவில்லை, கண்ணீர் முட்டுகிறது'' - சினிமா பிரபலங்கள் இரங்கல்

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்த நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்ப... மேலும் பார்க்க