செய்திகள் :

54 மணிநேரம் உயிர் போராட்டம்; கிணற்றில் தவறுதலாக விழுந்த பெண் பிழைத்தது எப்படி?

post image

சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஒரு பழைய கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் தவறுகளாக 48 வயதான பெண் ஒருவர் விழுந்திருக்கிறார். கிட்டத்தட்ட 54 மணி நேரத்திற்குப் பின் அவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட்படி, செப்டம்பர் 13ஆம் தேதி காட்டுப்பகுதிக்கு நடந்து சென்றிருக்கும்போது ஆழமான கிணற்றில் ஜின் என்பவர் தவறுதலாக விழுந்திருக்கிறார்.

மறுநாள் அவர் காணாமல் போனதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து மீட்புக் குழுவினர் அவரை தேடும் முயற்சியை செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கினர்.

Woman fell into well

ட்ரோன் உதவியுடன் அவரைத் தேடி வந்தனர். இதற்கிடையில் ஜின் அந்த கிணற்றின் சுவரைப் பிடித்து ஒட்டிக்கொண்டு இருக்கிறார். சுவரைப் பிடித்துக் கொண்டு கால்களில் நீச்சல் அடித்துக்கொண்டு, அவர் அந்த 54 மணி நேரத்தையும் கடந்திருக்கிறார்.

மீட்பு குழுவினர்கள் அவரை செப்டம்பர் 15 அன்று பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இது குறித்து அவர் கூறுகையில் "நான் விரக்தியடைந்து முற்றிலும் உடைந்து போன தருணங்கள் இருந்தன. கிணற்றின் சுவரை விட்டுவிடலாம் என்று பலமுறை நினைத்தேன், ஆனால் பின்னர் என் அம்மா, அப்பா, கல்லூரியில் சேரத் தொடங்கிய என் மகள் ஆகியோரை யோசித்து விடாமல் அந்த சுவரைப் பற்றிக் கொண்டு இருந்தேன்.

கிணற்றின் அடிப்பகுதி மிகவும் இருட்டாக இருந்தது. கொசுக்கள் நிறைந்திருந்தன. அருகிலேயே சில நீர் பாம்புகள் நீந்திக் கொண்டிருந்தன. ஒரு முறை நீர் பாம்பு என் கையில் கடித்தது. ஆனால் அது விஷம் அல்ல. எந்த தீங்கும் ஏற்படாமல் நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளேன்" என்று கூறியிருக்கிறார். அவர் கைகளில் ஏற்பட்ட காயங்களுக்கு மட்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளித்திருக்கின்றனர்.

நிம்மதி தராத ரூ.4 கோடி சேமிப்பு: சிக்கன வாழ்க்கையால் வருந்தும் 67 வயது முதியவர்

இன்றைய உலகில் பணம் வாழ்க்கைக்கு ஒரு அத்தியாவசியமான ஒன்று. ஆனால் அது மட்டுமே வாழ்க்கை ஆகிவிட முடியாது என்று ஜப்பானை சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவர் உணர்ந்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.சிக்கனமான வாழ்க்கை ... மேலும் பார்க்க

குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்; மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்திய வெற்றி ஓட்டம்

மதுரை, செப்டம்பர் 28, 2025: சர்வதேச குழந்தைப்பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாத அனுசரிப்பின் ஒரு பகுதியாக, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை ‘வெற்றி ஓட்ட மாரத்தான்’என்ற நிகழ்வை ... மேலும் பார்க்க

BSNL: நாடு முழுவதும் 92,000 இடங்களில் BSNL 4G இணைய சேவை துவக்கம் - தொழில்நுட்ப சிறப்புகள் என்ன?

நாட்டில் இப்போது ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய 3 தனியார் மொபைல் போன் நிறுவனங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்நிறுவனங்கள் படிப்படியாகத் தங்களது சேவை கட்டணத்தை அதிகரித்து வருகின்றன. ஆரம்பத்தில் 99 ரூபாய்க்கு ... மேலும் பார்க்க

காதம்பரி எஸ்.விஸ்வநாதன் & டாக்டர் ஏ. ஸ்ரவன் கிருஷ்ணாவின் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி

ஒரு திரைப்படக் காட்சியிலிருந்து நேராக ஒரு அரச நடைப்பயணம், மேடையையும் இதயங்களையும் ஒளிரச் செய்த ஒரு சர்வதேச நடன நிகழ்ச்சி மற்றும் அவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'தனிப்பயனாக்கப்பட்ட திருமண கீத... மேலும் பார்க்க

MiG-21 Retirement: முடிவுக்கு வந்த 62 வருட சேவை: மிக்-21 விமானங்களுக்கு பிரியாவிடை கொடுத்த IAF

இந்திய விமானப்படையில் முக்கிய, பல போர்களின் நாயகனாக விளங்கிய MiG-21 ரக போர் விமானங்கள், 62 ஆண்டு கால சேவைக்குப் பிறகு இன்று ஓய்வு பெற்றன. நாட்டின் முதல் சூப்பர்சோனிக் போர் விமானம் என்ற பெருமைக்குரிய இ... மேலும் பார்க்க

Sugar Dating: பணக்கார வயதானவர்கள் மீது தோழமை கொள்ளும் இளம் வயதினர் - இந்த போக்கு ட்ரெண்டாவது ஏன்?

தற்போது இருக்கும் நவீன காலத்தில் இளைய தலைமுறையினர், உறவுகளை வளர்க்க சமூக வலைதளங்களை நாடிச் செல்கின்றனர். டேட்டிங் முதல் திருமணம் செய்வது வரை ஆன்லைனிலேயே பார்க்கின்றனர். இப்படி ட்ரெண்ட் மாறிக்கொண்டே இர... மேலும் பார்க்க