செய்திகள் :

லடாக் வன்முறை: லேயில் 6-ஆவது நாளாக ஊரடங்கு நீட்டிப்பு

post image

வன்முறை போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் 6-ஆவது நாளாக திங்கள்கிழமையும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுயில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள பகுதிகளில் நிலைமை பெரும்பாலும் அமைதியாகவே உள்ளது. விரும்பத்தகாத சம்பவம் எதுவும் பதிவாகவில்லை. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, பதற்றமான பகுதிகளில் போலீஸாரும் துணை ராணுவப் படைகளும் அதிக அளவில் நிறுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

லே நகரில் மொபைல் இணைய சேவைகள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். கார்கில் உள்பட யூனியன் பிரதேசத்தின் முக்கிய பகுதிகளில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதைத் தடை செய்யும் தடை உத்தரவுகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. இதனிடையே பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்ய துணைநிலை ஆளுநர் கவிந்தர் குப்தா உயர் மட்டக் கூட்டம் நடைபெற உள்ளது.

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணை அந்தஸ்து கோரி தொடா் போராட்டம் நடத்தி வந்த சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக், கடந்த செப்டம்பா் 10-ஆம் தேதி முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினாா். ‘லே உச்ச அமைப்பை’ (எல்ஏபி)’ சோ்ந்த சிலரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காஸா போர் முடிவுக்கு வருமா? டிரம்ப் - நெதன்யாகு இன்று சந்திப்பு!

அவா்களுக்கு ஆதரவாக லடாக் தலைநகா் லேயில் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரா்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 4 போ் உயிரிழந்தனா். 40 போலீஸாா் உள்பட 90 போ் காயமடைந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக 50-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வன்முறைக்குத் தூண்டுகோலாக இருந்ததாக குற்றம்சாட்டி சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் கடந்த புதன்கிழமை முதல் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு 6-ஆவது நாளாக திங்கள்கிழமையும் நீட்டிக்கப்பட்டது.

Curfew remained in force for the sixth consecutive day in this violence-hit town on Monday, with Lieutenant Governor Kavinder Gupta scheduled to chair a high-level meeting to review the overall security situation.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றம்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள முயற்சிக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதையட... மேலும் பார்க்க

இத்தாலி பிரதமர் மெலோனி சுயசரிதைக்கு பிரதமர் மோடி முன்னுரை!

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதைக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதியுள்ளார்.இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதையின் இந்தியப் பதிப்புக்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதியுள்ளதாகத... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல்: 8 பேர் கொண்ட குழுவை அமைத்த பாஜக!

கரூர் கூட்ட நெரிசலுக்கான காரணத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் குழுவை அமைத்துள்ளதாக பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

காஷ்மீர்: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு 7 சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த ஏழு சுற்றுலா தலங்களை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் திங்கள்கிழமை மீண்டும் திறந்தது. முன்னதாக வெள்ளிக்கிழமை நடந்த ஒருங்கிணைந்த தலைமையகக் கூட்டத்தில்... மேலும் பார்க்க

பிகாரில் முதல்வரின் சொந்த மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் காயம்

பிகாரில் முதல்வர் நிதீஷின் சொந்த மாவட்டத்தில் கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்தனர். பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் சொந்த மாவட்டமான நாளந்தாவில் கட்டுமானத்தில் இருந்த... மேலும் பார்க்க

மேற்கு வங்காளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 3 பேர் பலி

மேற்கு வங்கத்தில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி பெண் உள்பட 3 பேரி பலியாகினர். மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஷ்யாம்நகர் நிலையம் அருகே சனிக்கிழமை இரவு தண்டவாளத்தை ... மேலும் பார்க்க