பிகாரில் முதல்வரின் சொந்த மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் காயம்
பிகாரில் முதல்வர் நிதீஷின் சொந்த மாவட்டத்தில் கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்தனர்.
பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் சொந்த மாவட்டமான நாளந்தாவில் கட்டுமானத்தில் இருந்த ரயில்வே மேம்பாலம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடிந்து விழுந்தது.
அப்போது பல தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
உடனே உள்ளூர்வாசிகள் ஹர்னாட் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். நிகழ்விடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் அவர்களை மீட்டனர். இந்த சம்பவத்தில் ஆறு தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
கட்டுமானத் தரம் மோசமாக இருந்ததே இடிபாடுகளுக்குக் காரணம் என்று உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர்.
மேற்கு வங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 3 பேர் பலி
கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் முறையான விசாரணைக்குப் பிறகு கண்டறியப்படும் என்று மாவட்ட மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சமீபத்தில் மோதிஹரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி, மூன்று ஆண்டுகளில் மாநிலத்தில் 27 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.