செய்திகள் :

ஜீ தமிழ் தொடர்களில் சிறந்த நடிகை யார்?

post image

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் சிறந்த நடிகை யார்? என்பதற்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதில், ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான தொடரின் நாயகிக்கு வாக்களிக்கலாம். அதிக வாக்குகள் பெறும் நடிகை மக்கள் மனம் கவர்ந்த சின்ன திரை நடிகையாகத் தேர்வு செய்யப்படுவார்.

சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகளுக்கு இணையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெகுஜனங்களைக் கவரும் வகையிலான தொடர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

சமீபத்தில் கூட பாரிஜாதம், திருமாங்கல்யம் எனப் புதிய தொடர்கள் அறிமுகமாகியுள்ளன.

ரசிகர்களை ஈர்க்கும் வகையில் மிகப்பெரிய நடிகர் பட்டாளங்களை வைத்தும் தொடர்களை தயாரித்து அதனை ஒளிபரப்பி வருகிறது. சினிமாவில் வாய்ப்பு குறைந்த நாயகிகள் சின்ன திரையில் நாயகியாக நடிக்க வருவதுமாறி, தற்போது சின்ன திரையில் நடித்தே பிரபலமாகும் நாயகிகளும் உருவாகியுள்ளனர்.

இவர்களுக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்களும் சேர்ந்துள்ளனர். சினிமா நாயகிகளுக்கு இருக்கும் அளவுக்கு சின்ன திரை நாயகிகளின் பதிவுகளுக்கும் ரசிகர்கள் ஆதரவு கிடைக்கின்றன.

சின்ன திரையிலிருந்து வெள்ளித் திரைக்குச் செல்லும் அளவுக்கு அவர்களுக்கான அங்கீகாரமும் உயர்ந்துள்ளது. சின்ன திரையில் நடிப்பவர்களை அங்கீகரிக்கும் விதமாக தொலைக்காட்சி நிர்வாகமே விருதுகளை வழங்கி ஊக்குவிக்கிறது.

அந்தவகையில், சின்ன திரையில் மக்கள் மனங்களைக் கவர்ந்த நடிகை யார்? என்பதற்கான வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது. இதற்கான போட்டியில் கெட்டி மேளம் தொடரின் நாயகி சாயா சிங், கெட்டி மேளம் தொடர் செளந்தர்யா ரெட்டி, அண்ணா தொடர் நித்யா ராம், அயலி தொடர் தேஜஸ்வினி, வீரா தொடரின் நாயகி வைஷ்ணவி, கார்த்திகை தீபம் தொடரின் நாயகி ரேவதி ஆகியோர் உள்ளனர். இதில், தங்களுக்கு விருப்பமான நடிகைக்கு ரசிகர்கள் வாக்களிக்கலாம்.

இதையும் படிக்க | குக் வித் கோமாளி -6 வெற்றியாளர் ராஜூ ஜெயமோகன்!

Best actress in zee tamil serial

பிரபாஸின் ராஜா சாப் டிரைலர்!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான ராஜாசாப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில... மேலும் பார்க்க

26 ஆண்டுகளுக்குப் பிறகு மறுஒளிபரப்பாகிறது சித்தி தொடர்!

ராதிகா சரத்குமார் - சிவகுமார் நடிப்பில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்ற சித்தி தொடர் மறுஒளிபரப்பாகவுள்ளது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு சித்தி தொடரின் முதல் பாகம் ஒளிபரப்பாகவுள்ளதால், ரசிகர்கள் மத்தியி... மேலும் பார்க்க

விஷ்ணு விஷாலின் ஆர்யன் டீசர் அப்டேட்!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான ஆர்யன் திரைப்படத்தின் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் பிரவீன் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்துள்ள ஆர்யன் வரும் அக்டோபர் 31 ஆம... மேலும் பார்க்க

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பராசக்தி!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அமரன், மதராஸி திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி திரைப... மேலும் பார்க்க

குக் வித் கோமாளி -6 வெற்றியாளர் ராஜூ ஜெயமோகன்!

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ராஜூ ஜெயமோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வெற்றிக் கோப்பையுடன் ரூ. 5 லட்சத்துக்கான பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. ஷபானா, உமர் லத்தீப், லட்சுமி ர... மேலும் பார்க்க

விக்ரமின் அடுத்த படம் என்ன?

நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள திரைப்படங்களின் படப்பிடிப்பு தள்ளிச்சென்றபடியே இருக்கிறது.நடிகர் விக்ரம் வீர தீர சூரன் - 2 படத்தைத் தொடர்ந்து மாவீரன் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார... மேலும் பார்க்க