செய்திகள் :

முதல்வர் ஸ்டாலினின் விடியோதான் பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது: இபிஎஸ்

post image

முதல்வர் ஸ்டாலினின் விடியோதான் பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி!

நேற்று, நான் கரூர் சென்று உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி, சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்த போது, எந்த வித அரசியலுக்கும் இடமின்றி, மக்களின் உணர்வாக எனது கருத்துகளைத் தெரிவித்து, அதே சமயம், மக்களின் சந்தேகங்களையும் பதிவு செய்தேன்.

அதற்கெல்லாம் உரிய பதில் அளிக்க திராணி இல்லாமல், சமூக வலைதளங்களில் அவதூறு பரவுகிறது என்று கூறுகிறீர்களே...

என்ன அவதூறு பரவியது?

-உங்கள் கட்சிக் காரர்கள், "தமிழ்நாடு மாணவர் சங்கம்" என்ற பெயரில் போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களே- அந்த அவதூறா?

-உங்கள் அரசின் காவல்துறை பிரச்சாரம் செய்ய ஒதுக்கிய இடத்தில் உள்ள குளறுபடிகள், திமுக-வின் வழக்கமான ஆம்புலன்ஸ் அரசியல், தடியடி நடந்த காட்சிகள் வெளிவந்து, அதைப் பற்றி பொதுமக்கள் பேசுவது- இவை எல்லாம் வதந்தியா?

பொறுப்போடு நடந்து கொள்வது என்றால் என்ன?

உங்கள் அமைச்சர் ஒருவர் அழுவது போல் நடிக்கத் தெரியாமல் மாட்டிக் கொண்டாரே- அதுவா?

அல்லது, உங்கள் மகனும், துணை முதல்வருமானவர், கரூர் வந்து சம்பிரதாயத்திற்கு போட்டோஷூட் எடுத்த கையோடு, துபைக்கு Vacation பறந்து சென்றுவிட்டாரே- அதுவா?

கள்ளக்குறிச்சியில் உங்கள் ஆட்சியின் அலட்சியத்தால் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களுக்கு கனக்காத இதயம், கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா?

சென்னை ஏர் ஷோ-வை நீங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து கண்டு களித்த போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தார்களே- அப்போது மட்டும் வீட்டிலேயே இருக்க முடிந்ததா? யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள் மு.க.ஸ்டாலின் அவர்களே?

கரூர் பலி: இரவில் உடற்கூராய்வு செய்யக் கூடாதா? உண்மை என்ன?

எதிர்க்கட்சிகள் யாரும் இதுவரை எந்த அரசியலும் செய்யவில்லை. ஆனால், உங்களின் இந்த வீடியோ தான், பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது!

இதில் இன்னும் கொடுமையாக, நீங்கள் அமைத்த ஒருநபர் விசாரணை ஆணையம், விசாரிக்கும் காட்சிகள் ஊடகங்களில் தொடர்ந்து வருகின்றன. அதைப் பார்க்கும் மக்களுக்கே, இது ஒருதலைபட்சமான, அரசின் தவறுகளை மூடி மறைக்கும் Eyewash ஆணையம் என்பதைக் காட்டுகிறது.

மக்களுக்கு திமுக அரசின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை. கரூர் துயரத்திற்கான உரிய நீதி கிடைக்க, நடந்தது என்னவென்று மக்களுக்கு உண்மை நிலை தெரிய, CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

மு.க.ஸ்டாலின் அவர்களே- மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்திலும் உங்கள் போட்டோஷூட்டால் மக்களை மேலும் துன்புறுத்தாதீர்கள்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

AIADMK General Secretary Edappadi Palaniswami has said that Chief Minister Stalin video is causing many political doubts.

கரூரில் நெரிசலில் காயம்- 51 பேர் டிஸ்சார்ஜ்

தவெக கூட்டத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த 110 பேரில் 51 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். எஞ்சிய 59 பேரில் 51 பேருக்கு கரூர் அரசு மருத்... மேலும் பார்க்க

கரூர் பலி: சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களின் மூலமாக வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.கரூரில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்ற... மேலும் பார்க்க

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,140 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,140 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவது மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 வாரங்களாக தங்கம், வெள்... மேலும் பார்க்க

தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு சிறப்பு மின்சார ரயில்கள்

கிளாம்பாக்கத்தில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆயுத பூஜை (புதன்), காந்தி ஜெயந்தி (வியாழன்) விடுமுறையைத் தொடர்ந்து வார ... மேலும் பார்க்க

யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை! நிர்மலா சீதாராமன்

கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை என்று மத்திய நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.கரூர் விஜய் பிரசாரக் கூட்டநெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரையும், மருத்து... மேலும் பார்க்க

கரூர் பலி: ஹேமமாலினி தலைமையில் விசாரணைக் குழு

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக ஹேமமாலினி எம்.பி. தலைமையில் குழு அமைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி உத்தரவிட்டுள்ளது.கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க