செய்திகள் :

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றம்!

post image

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள முயற்சிக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதையடுத்து அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களுக்கும் இதனை விரிவுபடுத்த தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கேரள அரசு இதற்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

"உச்சநீதிமன்றம் இதுகுறித்து இன்னும் தனது தீர்ப்பை அறிவிக்காத நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள கேரளம், தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் அவசர அவசரமாக முயற்சி செய்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை(NRC) மறைமுகமாக செயல்படுத்துவது ஆகும்.

பிகாரில் மக்களுக்கு நடந்த அநீதி பிற மாநில மக்களுக்கும் நடந்துவிடும் அச்சம் உள்ளது.

கேரளத்தில் விரைவில் தேர்தல் வரவுள்ளதால் இது மக்களின் உரிமையைப் பறிக்கும் முயற்சி" என்று இந்த தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் பினராயி விஜயன் கூறியிருக்கிறார்.

Kerala Assembly passes unanimous resolution expressing concern over EC's SIR

இதையும் படிக்க | செய்யறிவைக் கற்றுக்கொள்ளுங்கள் அல்லது வெளியேறுங்கள்! - அக்சென்ச்சர் சிஇஓ

நல்லாட்சிக்கான முன்மாதிரி பாஜக: பிரதமர் மோடி

நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்லும் ஆட்சிக்கான முன்மாதிரியாக பாஜக உருவாகியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தில்லியில் புதிதாக கட்டப்பட்ட பாஜக மாநில அலுவலகத்தின் திறப்பு விழாவ... மேலும் பார்க்க

பிஷ்னோய் கும்பலை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை கனடாவின் பயங்கரவாத அமைப்பாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இந்தியா உள்பட சர்வதேச அளவில் கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றில் தொடர்ப... மேலும் பார்க்க

தில்லி பாஜகவின் புதிய அலுவலகத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

தீன தயாள் உபாத்யாய் மார்க்கில் பாஜக தில்லி பிரிவின் புதிய அலுவலகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா, தில்லி முதல்வர் ரேகா குப்... மேலும் பார்க்க

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு 26% அதிகரிப்பு!

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தி லான்செட் ஆய்வு தெரிவித்துள்ளது.இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு, 1990-லிருந்து 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 1990-ல் ஒரு லட்சம் பேரில் 84.8 பேருக்கு ... மேலும் பார்க்க

இத்தாலி பிரதமர் மெலோனி சுயசரிதைக்கு பிரதமர் மோடி முன்னுரை!

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதைக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதியுள்ளார்.இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதையின் இந்தியப் பதிப்புக்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதியுள்ளதாகத... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல்: 8 பேர் கொண்ட குழுவை அமைத்த பாஜக!

கரூர் கூட்ட நெரிசலுக்கான காரணத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் குழுவை அமைத்துள்ளதாக பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க