செய்திகள் :

"ஆளாக்கிவிட்ட தந்தையை கொச்சைப்படுத்துபவரைப் பொருட்படுத்த வேண்டாம்" - அன்புமணி மீது அன்பில் அட்டாக்

post image

கரூரில் இரண்டு நாள்களுக்கு முன்பு (செப்டம்பர் 27), தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயண பிரசாரத்தில், எதிர்பாராதவிதமாக 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தமிழக அரசு சார்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது.

இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

கரூர் துயரம்
கரூர் துயரம்

ஒருபக்கம் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணை சென்றுகொண்டிருக்க, மறுபக்கம் அரசியல் ரீதியாக ஒருவரையொருவர் சாடி வருகின்றனர்.

இவ்வாறிருக்க, சம்பவம் நடந்த இரவு பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் அழுததை, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று விமர்சனம் செய்தார்.

செய்தியாளர்களிடம் பேசுகையில் அன்புமணி, "உண்மை நிலவரம் வெளியே வர வேண்டும்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 68 பேர் உயிரிழந்தனர். அங்கு முதலமைச்சர், அமைச்சர்கள் யாரும் செல்லவில்லை. தற்போது கரூருக்கு முதலமைச்சர் தனி விமானத்தில் வருகிறார்.

இதில் இன்னொரு அமைச்சர் தேம்பித் தேம்பி அழுகிறார். அவருக்கு ஆஸ்கர் விருது வழங்க வேண்டுமென ஆஸ்கர் நிறுவனத்தை நான் கேட்டு கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

இந்த நிலையில், அன்புமணியின் இத்தகைய பேச்சை அன்பில் மகேஸ் விமர்சித்திருக்கிறார்.

தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அன்பில் மகேஸ், "மரியாதைக்குரிய அண்ணன் அன்புமணி ராமதாஸ், நாகரீகமற்று கொச்சையாகப் பேசியிருக்கிறார்.

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் 9 பேர் பள்ளிக்குச் செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சு குழந்தைகள்.

அவர்களை என்னுள் ஒருவராகக் கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராகக் கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன்.

எங்கள் தலைவர் முதலமைச்சர் சொல்வதுபோல `எந்தத் தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார்'.

தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம். ஆறுதல் தேடுகிறோம். ஆறுதல் சொல்கிறோம்.

வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்றே கருதுகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

விழுப்புரம்: `கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜியும், போலீஸும்தான் காரணம்!’ – தவெக நிர்வாகி தற்கொலை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் மேற்கொண்ட பிரசாரத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு; தவெக மாவட்டச் செயலாளர் கைது; போலீஸார் விசாரணை!

கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று முன்தினம் மேற்கொண்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இச... மேலும் பார்க்க

”தவெக நிகழ்வின் காலதாமதமே உயிர்பலிக்கு காரணம்; காவல்துறை மீது குற்றம் சுமத்துவது தவறானது”- அப்பாவு

நெல்லை மாவட்டம், வள்ளியூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, “கரூரில் த.வெக தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்ட நிகழ்வில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீ... மேலும் பார்க்க

`கட்டபொம்மனுக்கு துரோகம் இழைப்பு' - எட்டயபுரம் மன்னர் குறித்து 10-ம் வகுப்பு பாடநூலில் தவறான தகவலா?!

தமிழ்நாட்டின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது எட்டயபுரம் சமஸ்தானம். மகாகவி சுப்பிரமணிய பாரதியார் சீறாப்புராணம் இயற்றிய உமறுப்புலவர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் எ... மேலும் பார்க்க

கரூர்: பவர் கட், கல்வீச்சு, மர்ம நபர்கள் தாக்குதல் - இதெல்லாம் நடந்ததா? உண்மை என்ன?

கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அசம்பாவிதம் நடந்ததற்கு சதிச் செயல் காரணமா என்ற விவாதம் சமூக ஊடகங்களில் நடக்கிறது. இந்த விவகாரத்த... மேலும் பார்க்க