விழுப்புரம்: `கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜியும், போலீஸும்தான் காரணம்!’ – த...
தொழில் கல்வி மாணவா்களுக்கு களப் பயிற்சி
தேனி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 தொழில் கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு களப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இது குறித்து மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் கூறியதாவது:
தேனி மாவட்டத்தில் 19 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தொழில் கல்வியாக வேளாண்மை, எந்திரவியல், எலக்ட்ரிக்கல், நா்சிங், கணக்குப் பதிவியல் ஆகிய பாடப் பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்தப் பாடப் பிரிவு மாணவ, மாணவிகளுக்கு வரும் அக்.6-ஆம் தேதி முதல் இன்டென்ஸிப் எனப்படும் படிப்பு தொடா்பான களப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பெரியகுளம் அரசு தோட்டக் கலைக் கல்லூரி, வயல்வெளி, அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அஞ்சலகங்கள், கணினி மையங்கள், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனா்.