செய்திகள் :

பிஷ்னோய் கும்பலை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு

post image

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை கனடாவின் பயங்கரவாத அமைப்பாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்தியா உள்பட சர்வதேச அளவில் கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை பயங்கரவாத அமைப்பாக கனடா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்மூலம், கனடாவில் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடைய அல்லது சொந்தமான எந்தவொரு சொத்துகளையும் முடக்கவோ பறிமுதல் செய்யவோ அந்நாட்டு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. அந்நாட்டு சட்டத்தின்படி, பட்டியலிடப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு தெரிந்தே சொத்து அல்லது நிதியுதவி வழங்குவது அல்லது அதன் சொத்துகளைக் கையாள்வது என்பது குற்றமாகும்.

இந்தியாவுக்கு வெளியே செயல்படும் பன்னாட்டு குற்றவியல் அமைப்பான பிஷ்னோய் கும்பல், கனடாவிலும் உள்ளனர். மேலும், குறிப்பிடத்தக்க புலம்பெயர் சமூகங்கள் இருக்கும் பகுதிகளில் தீவிரமாக உள்ளனர்.

கொலை, துப்பாக்கிச் சூடு, தீவைப்பு, மிரட்டிப் பணம் பறித்தல் ஆகியவற்றில் ஈடுபடுவதன் மூலம் இந்தக் கும்பல் பயங்கரவாதத்தை உருவாக்குகிறது. மேலும், குறிப்பிட்ட சமூகத்தின் தலைவர்கள், பிரமுகர்கள், வணிகங்களில் குறிவைத்து, அக்குறிப்பிட்ட சமூகத்தினரிடையே பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றனர்.

இதையும் படிக்க:இத்தாலி பிரதமர் மெலோனி சுயசரிதைக்கு பிரதமர் மோடி முன்னுரை!

Canada lists Lawrence Bishnoi's gang as terrorist entity

நல்லாட்சிக்கான முன்மாதிரி பாஜக: பிரதமர் மோடி

நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்லும் ஆட்சிக்கான முன்மாதிரியாக பாஜக உருவாகியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தில்லியில் புதிதாக கட்டப்பட்ட பாஜக மாநில அலுவலகத்தின் திறப்பு விழாவ... மேலும் பார்க்க

தில்லி பாஜகவின் புதிய அலுவலகத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

தீன தயாள் உபாத்யாய் மார்க்கில் பாஜக தில்லி பிரிவின் புதிய அலுவலகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா, தில்லி முதல்வர் ரேகா குப்... மேலும் பார்க்க

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு 26% அதிகரிப்பு!

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தி லான்செட் ஆய்வு தெரிவித்துள்ளது.இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு, 1990-லிருந்து 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 1990-ல் ஒரு லட்சம் பேரில் 84.8 பேருக்கு ... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றம்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள முயற்சிக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதையட... மேலும் பார்க்க

இத்தாலி பிரதமர் மெலோனி சுயசரிதைக்கு பிரதமர் மோடி முன்னுரை!

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதைக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதியுள்ளார்.இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதையின் இந்தியப் பதிப்புக்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதியுள்ளதாகத... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல்: 8 பேர் கொண்ட குழுவை அமைத்த பாஜக!

கரூர் கூட்ட நெரிசலுக்கான காரணத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் குழுவை அமைத்துள்ளதாக பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க