TVK Vijay rally stampede : காயமடைந்தவர்கள் Exclusive பேட்டி | Ground report
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி - டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவிகித வரி விதிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சமூக வலைதளத்தில் டிரம்ப் கூறியதாவது,
``ஒரு குழந்தையிடமிருந்து மிட்டாயைத் திருடுவதுபோல, அமெரிக்காவிடமிருந்து திரைப்படத் தயாரிப்பு வணிகம் மற்ற நாடுகளால் திருடப்படுகிறது.
இந்த நீண்டகால மற்றும் தீர்வடையாத சிக்கலைத் தீர்ப்பதற்காக, அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவிகித வரியை விதிப்பேன். இதனை கவனத்துக்கு கொண்டு வந்ததற்கு நன்றி’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் வெளிநாட்டு பொருள்கள் விற்கப்படுவதற்கும், பிற நாட்டு ஊழியர்கள் பணிபுரிவதற்கும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரியையும் விதிக்கும் அந்நாட்டு அதிபர் டிரம்ப், தற்போது வெளிநாட்டில் தயாரிக்கப்படும் (ஹாலிவுட் அல்லாத) திரைப்படங்களுக்கும் வரியை விதிக்கவுள்ளார்.
இதையும் படிக்க:காஸா போர் முடிவுக்கு வருமா? டிரம்ப் - நெதன்யாகு இன்று சந்திப்பு!