செய்திகள் :

26 ஆண்டுகளுக்குப் பிறகு மறுஒளிபரப்பாகிறது சித்தி தொடர்!

post image

ராதிகா சரத்குமார் - சிவகுமார் நடிப்பில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்ற சித்தி தொடர் மறுஒளிபரப்பாகவுள்ளது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு சித்தி தொடரின் முதல் பாகம் ஒளிபரப்பாகவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பழைய ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் விதமாகவும், புதிய ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை தூண்டும் விதமாகவும் சித்தி தொடர் மறுஒளிபரப்பாகவுள்ளது.

சன் தொலைக்காட்சியில் 1999 டிசம்பர் முதல் சித்தி தொடர் ஒளிபரப்பானது. ராதிகா நாயகியாகவும், சிவகுமார் நாயகனாகவும் நடித்த இந்தத் தொடர், கிட்டத்தட்ட இரு ஆண்டுகளுக்கு 2001 நவம்பர் வரை ஒளிபரப்பானது.

’இதி கத காது’ என்ற தெலுங்கு தொடரில் நடித்திருந்தாலும், தமிழுக்கு சித்தி தொடரின் மூலமே சின்ன திரைக்கு ராதிகா அறிமுகமானார். இதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அண்ணாமலை, செல்வி, செல்லமே, அரசி, வாணி ராணி, தாமரை ஆகிய தொடர்களில் நடித்தார்.

சித்தி தொடரின் வரவேற்பைத் தொடர்ந்து சித்தி இரண்டாம் பாகத்திலும் ராதிகா நடித்திருந்தார். இந்தத் தொடர் 2020 முதல் 2022 வரை ஒளிபரப்பானது. ராடன் மீடியா தயாரிப்பில், சன் தொலைக்காட்சியில் இந்தத் தொடர் ஒளிபரப்பானது.

இந்நிலையில், தந்தி ஒன் தொலைக்காட்சியில் சித்தி தொடர் மறுஒளிபரப்பாகவுள்ளது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு மறு ஒளிபரப்பாகவுள்ளதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க |ஜீ தமிழ் தொடர்களில் சிறந்த நடிகை யார்?

Radhika sarathkumars Chiththi serial retelecast after 26 years

20களுக்கும் 30களுக்கும் வித்தியாசம் என்ன? சமந்தா எழுதிய கவிதை!

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இருபதுகளில் இருந்து முப்பது என்பது எந்தவகையில் மாறுபட்டதாக உள்ளது என்பதை கவிதையாக சமந்தா எழுதியுள்ளார். இருபதுகளின் வேகத்தில் தொலைத்த காலம், இன்பம், குடும்ப நேரம் என பலவற்றைய... மேலும் பார்க்க

பிரபாஸின் ராஜா சாப் டிரைலர்!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான ராஜாசாப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில... மேலும் பார்க்க

விஷ்ணு விஷாலின் ஆர்யன் டீசர் அப்டேட்!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான ஆர்யன் திரைப்படத்தின் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் பிரவீன் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்துள்ள ஆர்யன் வரும் அக்டோபர் 31 ஆம... மேலும் பார்க்க

ஜீ தமிழ் தொடர்களில் சிறந்த நடிகை யார்?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் சிறந்த நடிகை யார்? என்பதற்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில், ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான தொடரின் நாயகிக்கு வாக்களிக்கலாம். அதிக வாக்... மேலும் பார்க்க

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பராசக்தி!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அமரன், மதராஸி திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி திரைப... மேலும் பார்க்க