"ஆளாக்கிவிட்ட தந்தையை கொச்சைப்படுத்துபவரைப் பொருட்படுத்த வேண்டாம்" - அன்புமணி மீ...
பிரபாஸின் ராஜா சாப் டிரைலர்!
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான ராஜாசாப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்தார்.
சலார் படம் கடந்தாண்டு வெளியாகி ரூ.700 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதேபோல், கல்கி ஏடி 2989 ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தியது.
தற்போது, ஃபீபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் தி ராஜா சாப் படத்தில் பிரபாஸ் நடித்து முடித்துள்ளார்.
ஃபேண்டசி கலந்த ஹாரர் கதையாக உருவான இப்படம் அடுத்தாண்டு ஜன. 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.