செய்திகள் :

தமிழ்நாட்டில் இந்த வாரம் மழை எப்படி இருக்கும்? - வானிலை மையம் அறிக்கை

post image

தமிழ்நாட்டில் இந்த வாரம் வானிலை எப்படி இருக்கும் என்கிற அறிக்கையை வெளியிட்டுள்ளது சென்னை வானிலை மையம்.

இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 மழை
மழை

நாளை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

அக்டோபர் 1, 2025-ல் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 2, 2025-ல் கடலோர தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 3, 2025-ல் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 4, 5 2025-ல், தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Rain Update: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யலாம்?

மியான்மார் கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் வரும் 1-ம் தேதி வரை மழை! - எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? வானிலை மையத்தின் அப்டேட்

சென்னை வானிலை மையம் அடுத்த ஏழு நாள்களுக்கான வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் என்ன குறிப்பிட்டுள்ளது? இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்ன... மேலும் பார்க்க

தண்ணீரில் மிதக்கும் கொல்கத்தா; மழைக்கு 7 பேர் பலி; முடங்கிய போக்குவரத்து!

கொல்கத்தாவில் நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை கனமழை பெய்தது. இம்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கனமழையால் நகரின் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் மின்கசிவு உட்பட பல... மேலும் பார்க்க

Rain Alert: 28-ம் தேதி வரை `இந்த' மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; இன்று காலை 10 மணி வரை மழை நிலவரம்

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இந்த வாரம் முழுவதும் மழை தொடரும் என்று கூறப்படுகிறது. மழைசென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அறிவிப்பின் படி,இன்... மேலும் பார்க்க

Rain Alert: இந்த வாரம் முழுவதும் மழை; சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரியில் எந்தெந்த நாள்களில் மழை?

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த வாரம் முழுவதும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை இருக்கும். ... மேலும் பார்க்க

Rain Alert: இன்று காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யலாம்? சென்னையில் எப்போது வரை மழை?

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்துகொண்டு இருக்கிறது. தற்போது வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இன்று காலை 10 மணி வரை, தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி... மேலும் பார்க்க