முதல்வர் ஸ்டாலினின் விடியோதான் பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது: இபிஎஸ்
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பராசக்தி!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அமரன், மதராஸி திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் பீரியட் அரசியல் கதையாக எடுக்கப்பட்டு வருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முக்கியமாக, இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வருவதால் நிச்சயம் ஏமாற்றம் ஏற்படாது என பலரும் நம்புகின்றனர்.
இப்படத்தில் வில்லனாக ரவி மோகனும், முக்கிய கதாபாத்திரங்களில் அதர்வா, ஸ்ரீலீலா, ஃபாசில் ஜோசஃப் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, மதுரை, இலங்கை, பொள்ளாச்சியைத் தொடர்ந்து இறுதியாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாள்களில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்றும் கூறப்படுவதால் பராசக்தி திட்டமிட்டபடி திரைக்கு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: விக்ரமின் அடுத்த படம் என்ன?