விக்ரமின் அடுத்த படம் என்ன?
நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள திரைப்படங்களின் படப்பிடிப்பு தள்ளிச்சென்றபடியே இருக்கிறது.
நடிகர் விக்ரம் வீர தீர சூரன் - 2 படத்தைத் தொடர்ந்து மாவீரன் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், படத்தின் எழுத்துப் பணிகள் முடிவடையாததால் படப்பிடிப்பு தள்ளிச் சென்றபடியே இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, மெய்யழகன் இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள்தாக அறிவிப்பும் வெளியானது. இருந்தும், இப்படத்தின் பணிகள் துவங்க காலம் எடுக்கும் என்றே தெரிகிறது.
வீர தீர சூரன் வெளியாகி 6 மாதங்கள் ஆகியும் விக்ரம் புதிய திரைப்படத்தில் இணையாமல் இருப்பது அவரது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கலான், வீர தீர சூரன் திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றிப்படங்களாகவே அமைந்ததால், விக்ரமின் புதிய திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஆனால், அவர் அஸ்வின் மடோன் கதையில் நடிக்கிறாரா இல்லை வேறு ஏதாவது இயக்குநர் படத்தில் இணைகிறாரா எனத் தெரியவில்லை.
இதையும் படிக்க: காந்தாரா யுனிவர்ஸ் வருமா? ரிஷப் ஷெட்டி பதில்!