selena gomez: காதலரைக் கரம்பிடித்த செலினா கோம்ஸ் - வைரலாகும் திருமணப் புகைப்படங்...
செய்யறிவைக் கற்றுக்கொள்ளுங்கள் அல்லது வெளியேறுங்கள்! - அக்சென்ச்சர் சிஇஓ
செய்யறிவுத் திறனை கற்றுக்கொள்ளுங்கள் அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேறுங்கள் என அக்சென்ச்சர் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஜூலி ஸ்வீட் கூறியிருக்கிறார்.
அயர்லாந்தைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான அக்சென்ச்சர் உலகம் முழுவதும் உள்ள தன்னுடைய நிறுவனங்களில் பணியாற்றி வந்த 11,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கடந்த 3 மாதங்களில் பணிநீக்கம் செய்திருக்கிறது.
செய்யறிவுத் துறையின் அதிகவேக வளர்ச்சியினால் தகுதி இல்லாத ஊழியர்களை நீக்கியுள்ளதாக அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் அக்சென்ச்சர் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி ஜூலி ஸ்வீட் இது குறித்து தெரிவிக்கையில்,
"செய்யறிவு குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பயிற்சி அளிக்க முடியாத ஊழியர்கள்தான் வெளியேற்றப்படுகின்றனர். இன்றைய காலகட்டத்தில் செய்யறிவுத் திறன் அவசியம். அந்த திறன்களைப் பெற சாத்தியமில்லாத நேரத்தில் அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். தற்போது வெளியேற்றப்பட்ட ஊழியர்களுக்கு செய்யறிவு பயிற்சி அளிக்க முடியாது.
நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் அனைவரும் செய்யறிவைக் கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய வாடிக்கையாளர்களுக்கு செய்யறிவு திட்டப்பணிகளை(projects) செய்துகொடுக்க வேண்டும். அப்படி செய்ய முடியவில்லை என்றால் வெளியேறுங்கள்.
தற்போது நிறுவனத்தில் 77,000 செய்யறிவு வல்லுநர்கள் இருக்கிறார்கள். இதுவே 2023ல் 44,000 பேர்தான் இருந்தனர். வரும் நிதியாண்டில் செய்யறிவை மையப்படுத்தி கூடுதல் பணியாளர்கள் சேர்க்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | காஸா போர் முடிவுக்கு வருமா? டிரம்ப் - நெதன்யாகு இன்று சந்திப்பு!