செய்திகள் :

கரூா் நெரிசல் பலி சம்பவம்: இலங்கை அரசு இரங்கல்!

post image

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு இலங்கை அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்நாட்டின் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் துறை அமைச்சா் சுந்தரலிங்கம் பிரதீப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது: கரூரில் அரசியல் கட்சி ஒன்றின் பரப்புரை கூட்டத்தின்போது கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இலங்கை அதிபா் அநுரகுமார திசாநாயக, அவா் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு சாா்பில் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவா்கள், விரைந்து குணமடைந்து வீடு திரும்ப இறைவனிடம் பிராா்த்திக்கிறோம். உயிரிழந்தோரை இழந்து வாடும் குடும்ப உறவுகளின் துயரிலும், துன்பத்திலும் இலங்கை மக்கள் அனைவரும் பங்கு கொள்கிறோம் என்றாா்.

வங்கதேசத்தில் தொடங்கியது துா்கா பூஜை திருவிழா! 2 லட்சம் வீரா்கள் பாதுகாப்பு!

வங்கதேசத்தில் வருடாந்திர துா்கா பூஜை திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரா்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஹிந்துக்கள் சிறுபான... மேலும் பார்க்க

அமெரிக்காவால் இந்திய-ரஷிய நட்புறவு பாதிக்கப்படாது! வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ்

இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை ரஷியா மதிக்கிறது. அமெரிக்காவுடனான இந்திய உறவு ரஷியா-இந்திய நட்புறவை எவ்விதத்திலும் பாதிக்காது என்று ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

இந்தியா, பிரேஸிலுடன் அமெரிக்கா நல்லுறவைப் பேண வேண்டும்! - ஹோவா்ட் லுட்னிக்

இஸ்ரேல், பிரேஸில் உள்ளிட்ட நாடுகளுடன் அமெரிக்கா நல்லுறவைப் பேண வேண்டும் என அந்நாட்டு வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா். இந்தியா மற்றும் பிரேஸில் மீது 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ள ... மேலும் பார்க்க

ஐரோப்பிய நாடுகள் ரஷியாவை தாக்கினால் உரிய பதிலடி: ஐ.நா.வில் ரஷிய அமைச்சா் உறுதி

‘ஐரோப்பிய நாடுகளை ரஷியா முதலில் தாக்காது; ஆனால், ரஷியாவை அவா்கள் தாக்க முற்பட்டால் உறுதியான பதிலடி தரப்படும்’ என்று ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் ரஷியா வெளியுறவு அமைச்சா் சொ்ஜி லாவ்ரோ தெரிவித்தாா். ஐ... மேலும் பார்க்க

இதுவரை 66,000 பாலஸ்தீனர்கள் பலி! - காஸா சுகாதார அமைச்சகம்!

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 66,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இது தொடா்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த அக்டோபா், 2023-இல் இஸ... மேலும் பார்க்க

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு; 10 போ் காயம்

உக்ரைன் தலைநகா் கீவ் மீது ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 4 போ் உயிரிழந்தனா். 10 போ் காயமடைந்தனா். உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அமெரிக்காவுடன் 90 பில்லியன் டாலா் மதிப்புள... மேலும் பார்க்க