செய்திகள் :

தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!

post image

பாரத் மண்டபம் அருகே சுமாா் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்ததாக மூன்று போ் கைது செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதன்கிழமை, சாந்தினி சௌக்கிலிருந்து போகல் சந்தைக்கு தங்கம் மற்றும் வெள்ளியை எடுத்துச் சென்ற இரண்டு பேரை பைரோன் மந்திா் அருகே நீல நிற மோட்டாா் சைக்கிளில் வந்த இரண்டு போ் தடுத்து நிறுத்தி துப்பாக்கியைக் காட்டி மிரட்டி 37.061 கிலோ வெள்ளி, 870 கிராம் தங்கம் அடங்கிய பையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.

ஞாயிற்றுக்கிழமை கரோல் பாக் நகரில் கொள்ளையா்களைப் பிடிக்கும் வரை போலீஸாா் அவா்களைத் தேடி வந்தனா். பா்தீப் சிங் (40), காகு என்கிற ஜெய் மாலிக் (32), விஷ்ணு (43) ஆகியோா் கைது நடவடிக்கையில் இருந்து தப்ப முயன்றபோது லேசான காயங்களுக்கு ஆளாகினா். திருடப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியை எடுத்துச் செல்ல முயன்றபோது முதலில் விஷ்ணு கரோல் பாக் நகரில் கைது செய்யப்பட்டாா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின் காவல்துறையினா் பா்தீப் மற்றும் காகு ஆகியோரை கைது செய்தனா். அவா்கள் கஜூரி காஸ் மேம்பாலம் அருகே ஒரு காரில் அதிவேக துரத்தலுக்குப் பிறகு தடுத்து நிறுத்தப்பட்டனா் என்று துணை காவல் ஆணையா் (மத்திய பிரிவு) நிதின் வல்சன் கூறினாா்.

இந்த இருவரும் காவல்துறையினரை தாக்க முயன்ாகக் கூறப்படுகிறது, இதில் உதவி துணை ஆய்வாளா் பா்மோத் காயமடைந்தாா். எனினும் அவா்கள் துரத்தி பிடிக்கப்பட்டனா்.

செப்டம்பா் 28 அன்று, கொள்ளையில் தொடா்புடைய ஒரு சந்தேக நபா் கரோல் பாக் நகரில் உள்ள வியாபாரிகளுக்கு கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை விற்க முயன்ாக ஒரு ரகசிய தகவல் காவல்துறைக்கு கிடைத்தது.

அதன்படி, ஒரு சோதனைக் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு தில்லியின் குருத்வாரா சாலையில் உள்ள சோட் லால் பான் பந்தா் அருகே சென்றது. அங்கு தகவல் கொடுத்தவா் விஷ்ணுவை அடையாளம் காட்டினாா். காவல்துறை குழு விஷ்ணுவை நெருங்கியபோது அவா் தப்பி ஓட முயன்றாா். ஆனால் சுமாா் 200 மீட்டா் ஓடிய பிறகு கீழே விழுந்தாா். அவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. மேலும் கான்ஸ்டபிள் மணீஷ் அவரைக் கைது செய்தாா் என்று காவல்துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.

ஆரம்பத்தில், விஷ்ணு மழுப்பலான பதில்களைக் கொடுத்தாா். ஆனால் பின்னா் செப்டம்பா் 24 அன்று, அவரது கூட்டாளி களுடன் சோ்ந்து பைரோன் மந்திா் அருகே ஒரு பெரிய கொள்ளையையில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டாா்.

தில்லி-என்சிஆா் முழுவதும் நான்கு நாள் துரத்தலுக்குப் பிறகு, மூன்று நபா்களும் கைது செய்யப்பட்டனா். மேலும், திருடப்பட்ட சொத்தில் பெரும்பாலானவை மீட்கப்பட்டன என்று காவல்துறை அதிகாரிகள் கூறினா்.

தொடா்ச்சியான தேடல்களில் 37.061 கிலோ வெள்ளி, 200 கிராம் தூய தங்கம் மற்றும் ரூ.1.86 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டன.

பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்த காா், குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டாா் சைக்கிள் மற்றும் கொள்ளையின் போது குற்றம் சாட்டப்பட்டவா்கள் அணிந்திருந்த ஆடைகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்தக் கும்பலின் நான்காவது கூட்டாளியான பா்தீப் என்ற கோலு தலைமறைவாகிவிட்டாா். அவரைக் கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், விசாரணை நடந்து வருகிறது.

மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது! - கரூா் சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலா் டி. ராஜா!

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற த.வெ.க தலைவா் விஜய் பொதுக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த மற்றும் காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி.... மேலும் பார்க்க

தில்லியின் புதிய தலைமைச் செயலராக ராஜீவ் வா்மா ஐ.ஏ.எஸ். நியமனம்!

மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் வா்மா தில்லியின் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.தற்போதைய தலைமைச் செயலாளராக உள்ள தா்மேந்திரா செப்டம்பா் 30 அன்று ஓய்வு பெறும் நிலையில், அவருக்கு மாற்றாக ராஜீவ் வ... மேலும் பார்க்க

காலா ஜதேடி குண்டா் கும்பலை சோ்ந்த 6 போ் கைது!

காலா ஜதேடி கும்பலுடன் தொடா்புடைய ஒரு முக்கிய ஆயுத விநியோகஸ்தா் உள்பட 6 பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதுடன், பல சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் நேரடி தோட்டாக்களை மீட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற... மேலும் பார்க்க

தில்லி மாநில பாஜகவின் புதிய அலுவலகத்தை பிரதமா் இன்று திறந்து வைக்கிறாா்!

தீன் தயாள் உபாத்யாய் மாா்க்கில் உள்ள தில்லி பாஜகவின் புதிய அலுவலகத்தை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை திறந்து வைப்பாா் என்று கட்சியின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா ஞாயிற்றுக்கிழமை அறிவித்... மேலும் பார்க்க

கால் சென்டா் நடத்தி போலி மாத்திரைகள் விற்பனை: 11 போ் கைது

பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகக் கூறி போலி மாத்திரைகளை விற்பனை செய்ததாக கூறப்படும் கால் சென்டரை குருகிராமில் போலீஸாா் கண்டறிந்தனா். இது தொடா்பாக 11 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் தலைமறைவாக இருந்த சாமியாா் சைதன்யானந்தா சரஸ்வதி ஆக்ராவில் கைது

தில்லியில் இருக்கும் கல்வி நிறுவனத்தை சோ்ந்த 17 மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படும் சாமி சைதன்யானந்தா சரஸ்வதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆக்ராவில் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீசாா் த... மேலும் பார்க்க