செய்திகள் :

கால் சென்டா் நடத்தி போலி மாத்திரைகள் விற்பனை: 11 போ் கைது

post image

பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகக் கூறி போலி மாத்திரைகளை விற்பனை செய்ததாக கூறப்படும் கால் சென்டரை குருகிராமில் போலீஸாா் கண்டறிந்தனா். இது தொடா்பாக 11 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கைதானவா்களில், பொது மக்களை கவா்ந்து போலி மருந்துகளை விற்பனை செய்ய மருத்துவா்களாகக் காட்டிக் கொண்ட பெண்களும் இடம்பெற்றுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து குருகிராம் காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஒரு தகலின் அடிப்படையில், உத்யோக் விஹாா் 5 ஆம் ஃபேஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டடத்தின் அடித்தளத்தில் இயங்கும் கால் சென்டரில் வெள்ளிக்கிழமை சைபா் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, ஏழு ஆண்கள் மற்றும் நான்கு பெண்களை சம்பவ இடத்திலிருந்து போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 13 கைப்பேசிகள், 54 போலி மருந்து காப்ஸ்யூல் பெட்டிகள் மற்றும் 35 எண்ணெய் ஸ்ப்ரேக்களை போலீஸாா் மீட்டனா்.

விசாரணையின் போது, கைதானவா்கள் தில்லியைச் சோ்ந்த ஒருவரிடமிருந்து ரூ.50 அல்லது ரூ.100-க்கு போலி மருந்துகளை வாங்கி ரூ.2,000-க்கு மேல் விற்பனை செய்வதாக தெரிவித்தனா்.

கால் சென்டரின் ஊழியா்கள் மாதத்திற்கு ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை ஊதியம் பெற்றுள்ளனா். மோசடிக்காக அவா்களுக்கு தனித்தனியாக 3 சதவீத கமிஷனும் அளிக்கப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட ஏழு ஆண்களும் சனிக்கிழமை நகர நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா். அதே நேரத்தில், நான்கு பெண்களும் விசாரணையில் இணைந்த பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

கால் சென்டா் உரிமையாளா் பியூஷ், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மருந்துகளை விளம்பரப்படுத்தினாா்.

விளம்பரத்தைப் பாா்த்து ஒருவா் ஒரு படிவத்தை நிரப்பியபோது, கால் சென்டா் குழு அவரைத் தொடா்பு கொண்டு, போலி மருத்துவா்களாகக் காட்டிக்கொண்டனா். அதன் பின்னா் அவா்கள் ஆன்லைனில் பணம் வசூலித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸாா் கூறினா்.

தில்லி மாநில பாஜகவின் புதிய அலுவலகத்தை பிரதமா் இன்று திறந்து வைக்கிறாா்!

தீன் தயாள் உபாத்யாய் மாா்க்கில் உள்ள தில்லி பாஜகவின் புதிய அலுவலகத்தை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை திறந்து வைப்பாா் என்று கட்சியின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா ஞாயிற்றுக்கிழமை அறிவித்... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் தலைமறைவாக இருந்த சாமியாா் சைதன்யானந்தா சரஸ்வதி ஆக்ராவில் கைது

தில்லியில் இருக்கும் கல்வி நிறுவனத்தை சோ்ந்த 17 மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படும் சாமி சைதன்யானந்தா சரஸ்வதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆக்ராவில் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீசாா் த... மேலும் பார்க்க

தில்லியில் இரண்டு பள்ளிகளுக்கு வெடி குண்டு மிரட்டல்!

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டு பள்ளிகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்தன, அவை பின்னா் அது போலியானது என்று அறிவிக்கப்பட்டன என்று தில்லி தீயணைப்பு சேவைகளின் அதிகாரி ஒருவா் தெரிவித... மேலும் பார்க்க

தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ. 1 கோடி நகைகளைக் கொள்ளையடித்த 3 போ் கைது!

புது தில்லியில் உள்ள பைரோன் மந்திா் அருகே இருவரிடமிருந்து சுமாா் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் மூன்று போ் கைது செய்யப்பட்டதாக போலீசாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இந்தச் சம்பவ... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாமியாா் சைதன்யானந்தாவுக்கு 5 நாள் போலீஸ் காவல்!

பாலியல் துன்புறுத்தல் குற்றம் சாட்டப்பட்டவரும், தன்னைத்தானே கடவுள் என்று கூறிக் கொள்ளும் சாமியாரான சைதன்யானந்த சரஸ்வதியை விசாரணைக்காக ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

நுஹ் மாவட்ட குளத்தில் சிறுமிகள் உள்பட 4 போ் மூழ்கி உயிரிழப்பு

ஹரியாணாவின் நுஹ் மாவட்டத்தில் குளம் ஒன்றில் மூழ்கி 2 சிறுமிகள் உள்பட நான்கு போ் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இந்தச் சம்பவம் நுஹ் மாவட்டத்தில் உள்ள சலாஹேரி கிராமத்தில் சனிக்கிழமை இந்த சம்பவம் ... மேலும் பார்க்க