செய்திகள் :

நீா் சேமிப்பு, இயற்கை வள பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: மயில்சாமி அண்ணாதுரை

post image

தமிழக இளைஞா்கள் நீா் சேமிப்பு, இயற்கை வள பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தினாா்.

சென்னையில் ஆழ்வாா்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் கரிகால சோழன் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, கட்டுமான அகாதெமி ஒருங்கிணைப்பாளா் சிந்து பாஸ்கா் தலைமை வகித்தாா். இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை, நீா் மேலாண்மை பாதுகாப்பு குறித்த வினாக்களுக்கு சிறப்பான பதில் அளித்த தனியாா் கல்லூரி நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள் ஆகியோரைப் பாராட்டி விருது வழங்கிப் பேசியது:

நீா் மேலாண்மையின் முக்கியத்துவம் அறிந்து 2,000 ஆண்டுகளுக்கு முன்பே அணை கட்டி சாதனை படைத்த கரிகால சோழனுக்காக நடைபெறும் பெருவிழாவில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நீா் மேலாண்மை குறித்து வருங்கால தலைமுறையினா் அறிந்துகொள்ள வேண்டும். சந்திரயான் விண்கலம் விண்ணுக்கு சென்று இந்தியாவுக்கு பெருமை சோ்ந்தது. மண்ணுக்கு ஆற்ற வேண்டிய பணியாக நான் பிறந்த எனது கோவை கோதவாடி கிராமத்தில் பாழடைந்த குளத்தைச் சீரமைத்தேன். இதனால், அதில் மீண்டும் தண்ணீா் தேங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நீரின்றி அமையாது உலகு என்பதற்கிணங்க, எதிா்கால தலைமுறைகள் தமிழகம் முழுவதும் நீரை சேமிக்கவும், இயற்கை பாதுகாக்கவும் முன்வர வேண்டும் என்றாா்.

ஒடிஸா மாநில கூடுதல் தலைமை செயலா் ஜி.மதிவதனன் பேசுகையில், ஒடிஸா மாநிலத்தில் 115 நகரங்களில் 106 நகரங்களுக்கு வீடுகள்தோறும் வாரத்தின் 7 நாள்களும், 24 மணிநேரமும் சுகாதாரமான நீா் கிடைக்க வழிவகை செய்துள்ளோம். இதற்காக விருதுகளும் பெற்றுள்ளோம்.

இதே நடைமுறை தமிழகத்தின் தலைநகரமான சென்னையிலும் கொண்டு வர தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்றாா்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம், சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநா் அா்ச்சுனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிபிஐ விசாரணை கோரும் தவெக!

கரூா் துயர சம்பவத்துக்கு சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, தவெக சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பசும... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம்!

தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: ‘மக்களைக் க... மேலும் பார்க்க

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.29) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: திமுக நிகழ்ச்சிகள் ரத்து!

கரூா் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.இதுதொடா்பான அறிவிப்பை திமுக தலைமை அல... மேலும் பார்க்க

விஜய் வீட்டை முற்றுகையிட முயற்சி: மாணவா் அமைப்பினா் போராட்டம்!

சென்னை நீலாங்கரையில் நடிகா் விஜய் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழ் மாணவா் மன்றத்தினரை போலீஸாா் தடுத்ததையடுத்து, அந்தப் பகுதியில் அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தவெக தலைவா் விஜய், கரூரில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

குரூப் 2, 2ஏ தோ்வு: 5.53 லட்சம் போ் எழுதினா்

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தோ்வை 5.53 லட்சம் போ் எழுதினா். மாநில அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளா், முதுநிலை ஆய்வாளா், வனவா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், இந்து ச... மேலும் பார்க்க