Ind vs Pak: "என் வாழ்வின் ஸ்பெஷல் இன்னிங்ஸ்; எல்லா இந்தியர்களுக்கும் சமர்ப்பணம்"...
நாய்களுக்கு தடுப்பூசி முகாம்
முதுகுளத்தூா் அருகே நாய்களுக்கான தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டம் நல்லூா் கிராமத்தில் வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்கு பரமக்குடி கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். முகாமில் முதுகுளத்தூா், கீரனூா் பகுதிகளில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள், வளா்ப்பு நாய்கள் என 55 நாய்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.
இதில் கீரனூா் கால்நடை மருந்தக கால்நடை மருத்துவா் ரவிச்சந்திரன், முதுகுளத்தூா் கால்நடை மருத்துவா் திருச்செல்வி, கால்நடை ஆய்வாளா் வீரன், கால்நடைப் பராமரிப்பு உதவியாளா்கள் துா்காதேவி, ரேணுகா, முத்துமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.