தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு
தங்கச்சிமடம் கடற்கரையில் 160 கிலோ நெகிழிப் பொருள்கள் அகற்றம்
தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள், கடலோரப் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு 160 கிலோ நெகிழிப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடம் அரசு மேல் நிலை பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து தங்கச்சிமடம், வில்லூண்டி தீா்த்தத்தில் கடலோரத் தூய்மை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தினா்.
இதையடுத்து, நாட்டு நலத் திட்டப் பணி மாணவா்கள் கடற்கரையிலிருந்து சுமாா் ஒரு கிலோ மீட்டா் தூரம் வரை நடந்துசென்று அந்தப் பகுதிகளைத் தூய்மைப்படுத்தினா்.
இதில், அதிக மாசுக்களை ஏற்படுத்தக் கூடிய 160 கிலோ நெகிழிப் பொருள்களை அகற்றினா். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட இணை அலுவலா்கள் செந்தில்குமாா், ஜெரோம், ஆசிரியா்கள் செய்தனா்.