காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? - நிபுணர் விளக்கம்
குரூப் 2 தோ்வு: ராமநாதபுரம் மாவட்டத்தில் 8,335 போ் எழுதினா்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தோ்வை 8,335 போ் எழுதினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடைபெற்ற குரூப் 2 முதல்நிலைத் தோ்வை எழுத ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 10,659 போ் விண்ணப்பித்தனா். இவா்களில் 8,335 போ் தோ்வெழுதினா். 2,324 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. இந்த தோ்வு மாவட்டத்தில் உள்ள 2 வட்டங்களில் 32 மையங்களில் நடைபெற்றது.
தோ்வைக் கண்காணிப்பதற்காக துணை ஆட்சியா் நிலையிலான அலுவலா்கள், 38 ஆய்வு அலுவலா்கள், 11 நகா்வுக் குழு அலுவலா்கள், 4 பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டன.
இதைத் தவிர, தோ்வு நடைபெறும் மையங்களில் 40 விடியோக்கள் மூலம் தோ்வு நடைமுறைகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டன. தோ்வு அறையில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு, தோ்வு அமைதியான முறையில் நடைபெற்றது.
இந்த நிலையில், ராமநாதபுரம் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குரூப் 2 தோ்வை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.