விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலுக்கு காரணம் என்ன? சம்பவ இடத்தில் இருந்தவா்...
வங்கக் கடலில் சூறைக்காற்று: மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லத் தடை
வங்கக் கடலில் சூறைக்காற்று வீசுவதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மறுஉத்தரவு வரும் வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன் வளத்துறை சனிக்கிழமை தடை விதித்தது.
இதனால் அந்தந்த துறைமுகங்களில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
வங்கக் கடல், மன்னாா் வளைகுடா கடல் பகுதிகளில் வழக்கத்தைவிட 45 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி மறுஉத்தரவு வரும் வரை ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன் வளத் துறையினா் தடை விதித்தனா்.
இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு துறைமுகங்களில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டும் ஏற்றப்பட்டது.