செய்திகள் :

கரூர்: ``என் அம்மாவின் மரணத்தை நினைவுபடுத்தியது; தர்மத்தின் வாழ்வுதனை'' - ஆதவ் அர்ஜுனா எமோஷனல்

post image

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகளும் தவெக, பாஜக கட்சிகளும் நிவாரணம் அறிவித்திருக்கின்றன.

கரூர் மருத்துவமனை
கரூர் மருத்துவமனை

இந்த சம்பவத்துக்குப் பிறகு முதன்முறையாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக ஆதவ் அர்ஜுனா தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் சமூக ஊடகங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay Karur Stampede - ஆதவ் அர்ஜுனா சொல்வதென்ன?

அவரது பதிவில், "என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த இருபத்தி நான்கு மணிநேரமாக அனுபவித்து வருகிறேன்.

இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டு உள்ளன. மரணத்தின் வலியையும், அந்த மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்துவருகிறேன்.

கரூர் விஜய் பிரசாரம்
கரூர் விஜய் பிரசாரம்

ஒரு மரணத்தின் வலியை ஐந்து வயது சிறுவனாக எனது தாயின் தற்கொலையில் பார்த்தபோதே உணர்ந்தவன். அந்த வலியை இப்போது எனக்கு மீண்டும் ஏற்படுத்தியுள்ளன இந்த மரணங்கள்.

இந்த நிமிடம் வரை இந்த துயர நிகழ்வைக் கடந்து செல்ல முடியாமலும், உறவுகளை இழந்து தவிக்கின்ற அந்தக் குடும்பங்களின் தவிப்புமே என்னை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த மரணங்கள். அந்தக் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வலியும் சராசரி மனிதனாகக் கடந்து செல்லும் மனநிலையில் என் மனம் இப்போது இல்லை.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்தக் குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும் என்பதை, இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக உறுதியுடன் கூறுகிறேன்.

துயரமும், துக்கமும் மட்டுமே என் மனதைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒரு உறவாய் என் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளேன்.

‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்!’ எனக் கூறியிருக்கிறார்.

கரூர் நெரிசல்: "கலெக்டரையும், எஸ்.பியையும் சஸ்பெண்ட் செய்யணும்" - அண்ணாமலை சொல்வதென்ன?

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர், சிலர் கவலைக்கிடமா... மேலும் பார்க்க

கரூர்: அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்யும் தடயவியல் துறை; விசாரணையைத் தொடங்கிய அருணா ஜெகதீசன்

கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 க்கும் மேற்பட்ட உயிரிழந்திருக்கின்றனர்.இந்த சம்பவம் குறித்து விசாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்த விசாரணை ஆணையத... மேலும் பார்க்க

TVK Vijay Karur Stampede: "கரூர் சம்பவத்தால் வருத்தமடைந்தேன்" - மம்முட்டி இரங்கல்

நேற்று கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் 40 பேர் உயிரிழந்திருந்தனர் பலர் காயமடைந்திருந்தனர்.தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கரூருக்கு நேரில் சென்று ஆ... மேலும் பார்க்க

கரூர்: அன்புமணிக்கும், செந்தில் பாலாஜிக்கும் ஒதுக்கிய உழவர் சந்தை திடல்; விஜய்க்கு மறுத்தது ஏன்?

த.வெ.க. சார்பில் உழவர் சந்தை திடலில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தார்கள். அந்த இடத்தில் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்திருக்கவில்லை. உழவர் சந்தை பகுதியில் விசாரித்ததில், அன்புமணியின் கூட்டத்த... மேலும் பார்க்க

``விஜய் போன்ற பிரபலங்களுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் வரும், அதனால்'' - FEFSI சொல்வதென்ன?

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (film employees federation of south india) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ... மேலும் பார்க்க