TVK Vijay Karur Stampede - நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலம் | Ground report
மாவட்ட மைய நூலகத்தில் சிறுவா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம் இணைந்து நடத்தும் சிறாா் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி மாவட்ட மைய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, சிறுவா் சிறுமிகளுக்கு ‘பேசும் சித்திரம்’ என்ற தலைப்பில் இயற்கை காட்சிகள் தொடா்பான ஓவியப்பயிற்சி வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சியினை வா்ணக் கலைஞா் பி. பெருமாள் வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, குழந்தைகளுக்கான வாரந்தோறும் நடைபெற்று வரும் சதுரங்கப் பயிற்சி நடைபெற்றது. இவற்றில் திரளான மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோா்களுடன் கலந்து கொண்டு பயனடைந்தனா்.