செய்திகள் :

இஸ்ரேல்-காசா போர்:`விரைவில் போர் நிறுத்தம்?' - நெதன்யாகு; ட்ரம்ப் அதிருப்தி, நெருக்கடிகள் காரணமா?

post image

இஸ்ரேல் காசா மீது நடத்தும் கோரத் தாக்குதல்களுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன.

இதன் ஒரு பகுதியாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா என ஒவ்வொரு நாடுகளாக பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரித்து வருகின்றன.

ஐ.நா பொதுச் சபையில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. அவர் உரையாற்றும்போது, பல நாடுகள் வெளிநடப்பு செய்துவிட்டன. இதெல்லாம் இஸ்ரேல் தாக்குதல் மற்றும் நெதன்யாகுவிற்கு எதிரான எதிர்ப்புகளே.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்ப் அதிருப்தி

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் தற்போது நெதன்யாகுவின் மேல் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ட்ரம்ப் இதுவரை நெதன்யாகுவிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் பெரிதாக எடுக்கவில்லை.

அவர் பாலஸ்தீனத்தின் தீவிரவாதத்தையே தொடர்ந்து எதிர்த்து வந்தார். ஆனால், காசா மீதான தாக்குதல் அதிகரிக்க அதிகரிக்க ட்ரம்பிற்கு ஒரு நெருக்கடி உண்டாகி உள்ளது.

காரணம், ட்ரம்ப் ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்தில் மிகவும் உறுதியாக இருக்கிறார். ஆனால், அந்த அளவிற்கு ஒரு எதிர்ப்பை இந்த விஷயத்தில் காட்டவில்லை என்பது நெருக்கடிக்குக் காரணம்.

மேலும், பல மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் தொடர்ந்து இறந்து வருகின்றனர் என்பதும் ட்ரம்பிற்கு இன்னொரு மிகப்பெரிய நெருக்கடி.

இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் 66,000 பாலஸ்தீன மக்கள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நெதன்யாகு பேச்சு

இந்த நிலையில், நேற்று அமெரிக்காவில் ட்ரம்ப் - நெதன்யாகு சந்திப்பு நடந்தது. முன்னரே கூறியிருந்தது போல, ஐ.நா பொதுச் சபையிற்காக அமெரிக்கா சென்றிருந்தார் நெதன்யாகு.

இந்தச் சந்திப்பிற்கு பிறகு நெதன்யாகு,

"போர் நிறுத்தம் குறித்து பேசி வருகிறோம். இன்னும் எதுவும் முடிவாகவில்லை. ஆனால், போர் நிறுத்தம் குறித்து ட்ரம்பின் குழுவோடு தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். அது நடக்கும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

ஐ.நா பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு

ஆனால், இஸ்ரேல் பணயக் கைதிகளை உடனே விடுவிக்கப்பட வேண்டும் என்பது நெதன்யாகுவின் வலுவான கோரிக்கையாக இருக்கிறது.

இந்தப் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை குறித்து இன்று ட்ரம்ப் 21 முக்கிய நிபந்தனைகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை முரண்டு பிடித்து வந்த ஹமாஸும், தற்போது போர் நிறுத்தத்தில் ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

கரூர் கூட்ட நெரிசல்: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு; தொடர் உயிரிழப்பால் சோகம்

கரூரில் நேற்று முன்தினம் தவெக தலைவர் விஜய் பரப்புரை நடந்தது. அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பலர் உயிரிழந்தனர். பலர் இன்னும் சிகிச்சையில் இருக்கிறார்கள். தற்போது இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 41 ஆக உயர... மேலும் பார்க்க

`வர்த்தகம் இந்தியாவின் முடிவு' - ஜெய்சங்கர் மாஸ் பேச்சு; `இதுதான் சுயமரியாதை' - மெச்சும் ரஷ்யா!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருவதால் இந்தியா மீது 25 சதவிகித வரி பிளஸ் கூடுதல் 25 சதவிகித வரியை விதித்துள்ளது அமெரிக்கா. இதன் மூலம், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி... மேலும் பார்க்க

TVK: `தி நியூயார்க் டைம்ஸ் முதல் தி கொரியா டைம்ஸ் வரை' - உலக நாடுகளின் பார்வையில் கரூர் சோகம்

தவெக தலைவர் விஜய் நேற்று கரூருக்குப் பரப்புரைக்காகச் சென்றிருந்தார். மதியம் 12 மணிக்கு பரப்புரை இடத்துக்கு வருவதற்குப் பதில் மாலை 7 மணிக்குப் பிறகே சென்றிருக்கிறார். அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சில... மேலும் பார்க்க