தங்கம் விலை உயர்வு! புதிய உச்சத்தில் வெள்ளி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்ந்துள்ளது. அதேபோல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை நிகழாண்டு தொடக்கத்தில் சவரன் ரூ.57,200-க்கு விற்பனையானது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நாள் முதலே, அவரது புதிய அறிவிப்புகள் எதிரொலியாக தங்கத்தின் விலை தொடந்து உயா்ந்த வண்ணம் உள்ளது.
அதன்படி கடந்த செப்.6-ஆம் தேதி ரூ.80,000-ஐ கடந்து புதிய உச்சத்தைத் தொட்டது.
தங்கம் விலை விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தைத் தொட்டுவிடும் என நிபுணர்கள், வியாபாரிகள் கருதி வரும் வேளையில், அதற்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ரூ. 85,120-க்கும், கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ரூ. 10,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப். 29) சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 85,600-க்கும் கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து ரூ. 10,700-க்கும் விற்பனையாகிறது.
புதிய உச்சத்தில் வெள்ளி
இந்த மாத தொடக்கத்தில் (செப். 1) வெள்ளி விலை கிராம் ரூ.136-க்கும், ஒரு கிலோ ரூ.1.36 லட்சத்துக்கும் விற்பனையானது. தொழில் துறையில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ள காரணத்தால் அதன் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.160-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயா்ந்து ரூ.1.60 லட்சத்துக்கும் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இதையும் படிக்க: விளையாட்டு களத்திலும் ஆபரேஷன் சிந்தூர்... இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து!