அஜித்: ``சினிமா, ரேஸிங் இரண்டையும் என் குழந்தைகள் மீது திணிக்க மாட்டேன், ஆனால்''...
கரூரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் பார்வையிடவதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூர் வருகை தந்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மூன்றாவது கட்டமாக நாமக்கல், கரூரில் பிரசார பயணம் மேற்கொண்டார். நாமக்கல் நிகழ்வை முடித்துக் கொண்டு, 7 மணி நேரம் தாமதமாக கரூருக்கு சனிக்கிழமை இரவு வந்தபோது, அவரைக்காண பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
அவர் இரவு 7 மணியளவில் பேசத் தொடங்கியபோது, ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்தபடி கூட்டம் அலைமோதியது.
இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனா். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கரூர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூருக்கு வருகை தந்துள்ளார்.
கரூருக்கு வந்துள்ள அவர், சம்பவ நடந்த வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அவருடன் மத்திய இணையமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உடன் உள்ளனர்.
மேலும், கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பங்களையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் நிர்மலா சீதாராமன் சந்திக்கவுள்ளார்.
கரூருக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகையையொட்டி, போலீஸார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: வீட்டைவிட்டு புறப்பட்ட விஜய்! எங்கே சென்றார்?