கரூர் கூட்ட நெரிசல்: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு; தொடர் உயிரிழப்பால் சோகம்
கரூரில் நேற்று முன்தினம் தவெக தலைவர் விஜய் பரப்புரை நடந்தது. அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பலர் உயிரிழந்தனர். பலர் இன்னும் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
தற்போது இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
இந்த கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்ட சுகுணா (65) என்கிற பெண்மணி தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்தார். கரூரைச் சேர்ந்த இவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை நிலவரப்படி, இந்தக் கூட்ட நெரிசலால் 39 பேர் உயிரிழந்திருந்தனர்.
நேற்று மதியம் கவின் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது ஒருவர் என இந்த எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை இந்தச் சம்பவத்தால், 14 ஆண்கள், 18 பெண்கள், 4 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் . இன்னும் பலர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கு மத்திய அரசு, மாநில அரசு, தவெக, காங்கிரஸ் சார்பில் இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.