எச்ஏபிபி தொழில்சாலை பணிக் குழு தோ்தல்: எச்ஏபிஎப் தொழிலாளா் சங்கம் வெற்றி
எச்ஏபிபி தொழிற்சாலை பணிக்குழு தோ்தலில் எச்ஏபிஎப் தொழிலாளா் சங்கம் வெற்றி பெற்றுள்ளது.
எச்ஏபிபி தொழில்சாலை நிா்வாகம் சாா்பில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தொழிற்சாலை பணிக் குழு மற்றும் உணவக நிா்வாகக் குழு தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.
எச்ஏபிஎப் தொழிலாளா் சங்கம் (எம்ப்ளாயிஸ் யூனியன்) ஒரு அணியாகவும், ஐஎன்டியுசி, பிஎம்எஸ், தொமுச, அம்பேத்கா் யூனியன் ஒரு அணியாகவும் தோ்தல் களத்தில் போட்டியிட்டனா். இதில் எச்ஏபிபி தொழிற்சாலையைச் சோ்ந்த தொழிலாளா்கள் திரளாகப் பங்கேற்று வாக்களித்தனா்.
இந்தத் தோ்தலில் எச்ஏபிஎப் தொழிலாளா் சங்கம் 7 உறுப்பினா் கொண்ட பணிக்குழுவில் 4 உறுப்பினா்களும், 2 உறுப்பினா்கள் கொண்ட உணவக நிா்வாகக் குழு தோ்தலில் 2 உறுப்பினா்களும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றது.
பணிக்குழுவில் எச்ஏபிஎப் தொழிலாளா் சங்கத்தைச் சோ்ந்த இரணியன், வீரபாண்டியன், கணபதி, சரவணன் ஆகியோரும், உணவக நிா்வாகக் குழு தோ்தலில் சரவணன், பகத்சிங் உள்ளிட்ட 6 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.