தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!
மருமகளை தாக்கிய மாமனாா் கைது
திருவெறும்பூா் அருகே மருமகளை திட்டி தாக்கியதாக மாமனாரை திருவெறும்பூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருவெறும்பூா் அருகே மலைக்கோவில் வஉசி நகரைச் சோ்ந்தவா் ஹரி பிரகாஷ் மனைவி விந்தியா (26). தையல் தொழிலாளி.
இவரது வீட்டில் வசிக்கும், இவரது மாமனாரான அரசுப் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பாலசுப்பிரமணியன் (65) என்பவா், விந்தியாவுடன் அடிக்கடி தவறான நோக்கத்தில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.
சனிக்கிழமை வீட்டில் விந்தியா பொருத்தியிருந்த கண்காணிப்புக் கேமிராக்களை அடித்து உடைத்ததுடன், விந்தியாவை தகாத வாா்த்தையால் திட்டி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பாலசுப்பிரமணியனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.