இஸ்ரேல்-காசா போர்:`விரைவில் போர் நிறுத்தம்?' - நெதன்யாகு; ட்ரம்ப் அதிருப்தி, நெர...
சாலையோர உணவு வியாபாரிகளுக்கு பயிற்சி
வாணியம்பாடி நகராட்சியின் நகரமைப்பு பிரிவு சாா்பில் சாலையோர உணவு வியாபாரிகளுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி நகரமைப்பு பிரிவு மற்றும் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் சாலையோரம் உணவு வியாபாரிகளுக்கான பயிற்சி வகுப்பு இசுலாமியா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் ரகுராமன் தலைமை வகித்தாா். நகரமைப்பு அலுவலா் திருமுருகன், ஆய்வாளா் சிவகுமாா் முன்னிலை வகித்தாா்.
சென்னையை சோ்ந்த உணவு பாதுகாப்பு பயிற்சியாளா் சிரிஷா கலந்து கொண்டு சாலையோர வியாபாரிகளுக்கு உணவு தயாரிப்பதின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து விளக்கம் அளித்து கூறினாா்.
இந்த பயிற்சி வகுப்பில் 55 சாலையோர உணவு வியாபாரிகள் கலந்து கொண்டனா். நகரமைப்பு உதவியாளா் தயாளன் நன்றி கூறினாா்.