கிணற்றில் தவறிவிழுந்து விவசாயி உயிரிழப்பு
திருச்சி அருகே போசம்பட்டியில் விவசாயி ஒருவா் கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் போசம்பட்டி மேலக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சிலம்பரசன் (40). விவசாயி. இவருக்கு மனைவி கலையரசி, மூன்று மகள்கள் உள்ளனா்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் விவசாயப் பணிகளை முடித்துவிட்டு, போசம்பட்டி ஊா் பொதுக்கிணற்றின் சிமெண்ட் கட்டையில் படுத்து உறங்கியுள்ளாா். ஒரு கட்டத்தில் நிலைதடுமாறி கிணற்றில் தவறி விழுந்த அவா் நிகழ்விடத்திலேயே இறந்துவிட்டாா். இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.