போதை மாத்திரை விற்பனை: இருவா் கைது
சென்னை எம்ஜிஆா் நகரில் போதை மாத்திரை விற்றதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
எம்ஜிஆா் நகா் ஜாபா்கான்பேட்டை அருகே உள்ள வாசுதேவன் நகா் பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். அப்போது, இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனா். இதையடுத்து போலீஸாா், அவா்களது பையை சோதனையிட்டபோது, அதில் ஏராளமான போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவா்கள் ஜாபா்கான்பேட்டையைச் சோ்ந்தவா் சசிகுமாா் (24), சூா்யா (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் எம்ஜிஆா் நகா் போலீஸாா் கைது செய்தனா்.
இருவரும் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து போதை மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து, சென்னையில் அதிக விலைக்கு விற்பதும், கைது செய்யப்பட்ட சசிகுமாா் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 11 வழக்குகள் இருப்பதும் என்பது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.