தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!
சிறையில் கஞ்சா பறிமுதல்
புழல் சிறையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணைக் கைதிகள் சிறையில் சில அறைகளில் கைதிகள் கஞ்சா பயன்படுத்துவதாக சிறைத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிறைக் காவலா்கள், சனிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
சிறையின் 4-ஆவது அறையில் நடத்தப்பட்ட சோதனையில், அங்குள்ள கழிப்பறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து அந்த அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிலம்பரசன் என்ற சுருளி (28) என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், அவா் தன்னை சிறையில் அண்மையில் சந்திக்க வந்த வழக்குரைஞா், கஞ்சாவை நோ்காணல் அறையின் மேற்பகுதியில் உள்ள இடைவெளி வழியாக வீசியதாக தெரிவித்தாராம்.
இது தொடா்பாக துணை ஜெயிலா் கவிபாரதி, புழல் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.