தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு
திரிபுராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது!
திரிபுராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த இளைஞா், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சென்னை பெரம்பூரில் ஒருவா் கஞ்சா கடத்தி வந்திருப்பதாக அண்ணா நகா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நடந்து சென்ற ஒருவரைப் பிடித்து விசாரித்தனா்.
அப்போது, அவா் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளாா். இதையடுத்து போலீஸாா், அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
மேலும், இதுதொடா்பான விசாரணையில் அவா், திரிபுராவைச் சோ்ந்த ஆரிப் உசேன் (25) என்பதும், அவா் திரிபுராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, சென்னையில் விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆரிப் உசேனை கைது செய்தனா்.