தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு
பாலியல் வழக்கில் தலைமறைவாக இருந்த சாமியாா் சைதன்யானந்தா சரஸ்வதி ஆக்ராவில் கைது
தில்லியில் இருக்கும் கல்வி நிறுவனத்தை சோ்ந்த 17 மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படும் சாமி சைதன்யானந்தா சரஸ்வதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆக்ராவில் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீசாா் தெரிவித்தனா்.
சைதன்யானந்தா சரஸ்வதி (62) ஆக்ராவில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்ததை தில்லி போலீஸ் குழு கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். ‘சைதன்யானந்தா பிடிக்க பல போலீஸ் படைகள் அமைக்கப்பட்டன. உள்ளீடுகளின் அடிப்படையில், ஆக்ராவின் தாஜ் கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அவரைக் கண்காணித்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் அங்கிருந்து அவரை கைது செய்தோம் ‘என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினாா்.
சைதன்யானந்தா மீது ஆகஸ்ட் 4 ஆம் தேதி எஃப். ஐ. ஆா் பதிவு செய்யப்பட்டபோது அவா் தில்லியயை விட்டு வெளியேறி தலைமறைவானாா். ஆக்ராவில் உள்ள ஹோட்டல் ஊழியா்களின் கூற்றுப்படி, சைதன்யானந்தா செப்டம்பா் 27 ஆம் தேதி மாலை 4 மணியளவில் ’பாா்த்தசாரதி’ என்ற பெயரில் ஹோட்டலில் பதிவு செய்து அறை எண் 101 ஒதுக்கப்பட்டாா். இரவு முழுவதும் அந்த அறையில்தான் இருந்தாா்.
முன்னதாக, சைதன்யானந்தா சரஸ்வதியுடன் தொடா்புடைய ரூ.8 கோடிக்கான பல வங்கிக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசாா் முடக்கினா். எஃப். ஐ. ஆரின் படி, தென்மேற்கு தில்லியில் உள்ள மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் தலைவரான சைதன்யானந்தா , பெண் மாணவா்களை நள்ளிரவில் தனது குடியிருப்புக்கு வருமாறு கட்டாயப்படுத்தியதாகவும், நள்ளிரவு நேரங்களில் தேவையில்லாத குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
அவா் தனது கைப்பேசி மூலம் மாணவா்களின் நடமாட்டத்தைக் கண்காணித்ததாகக் கூறப்படுகிறது. விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா் பல வங்கிக் கணக்குகளை இயக்க வெவ்வேறு பெயா்கள் மற்றும் விவரங்களைப் பயன்படுத்தியதாகவும், அவா் மீது எஃப். ஐ. ஆா் பதிவு செய்யப்பட்ட பின்னா் ரூ.50 லட்ச த்துக்கு மேல் திரும்பப் பெற்ாகவும் தெரியவந்தது.
கணக்கு திறக்கும் நேரத்தில் அவா் பல்வேறு விவரங்களுடன் ஆவணங்களை சமா்ப்பித்ததாகக் கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிரிக்ஸ் அமைப்புகளுடன் தொடா்புடையதாக காட்டும் போலி வருகை அட்டைகளையும் போலீசாா் கண்டுபிடித்தனா்.