செய்திகள் :

பாகிஸ்தான் வீரர்கள் நிறைய பேசினார்கள், நான் பேட்டினால் பதிலளித்தேன்: திலக் வர்மா

post image

பாகிஸ்தான் அணி வீரர்கள் நிறைய பேசியதாகவும், அதற்கு தனது பேட்டிங் மூலம் பதிலளித்ததாகவும் இந்திய வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. துபையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 9-வது முறையாக ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா ஆட்ட நாயகனாகவும், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட அபிஷேக் சர்மா தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணி வீரர்கள் நிறைய பேசியதாகவும், அதற்கு தனது பேட்டிங் மூலம் பதிலளித்ததாகவும் இந்திய வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: நான் பேட்டிங் செய்தபோது, பாகிஸ்தான் வீரர்கள் நிறைய பேசினார்கள். ஆனால், அவர்களுக்கு நான் பேட்டிங்கின் மூலம் பதில் கூற விரும்பினேன். தற்போது, நிறைய விஷயங்கள் பேசியவர்கள் எங்கென்றே தெரியவில்லை. திடலில் உள்ள ரசிகர்கள் வந்தே மாதரம் பாடியது புல்லரிக்கச் செய்தது. பாரத் மாதா கி ஜெய் எனக் கூற விரும்புகிறேன் என்றார்.

இந்திய அணி 77 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, பார்ட்னர்ஷிப் அமைத்த ஷிவம் துபே மற்றும் திலக் வர்மா சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த இணை 60 ரன்கள் சேர்த்து இந்திய அணி கோப்பையை வெல்ல உதவியது.

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி குறித்து ஷிவம் துபே பேசியதாவது: என்னுடைய பேட்டிங்கும் எதிரணிக்கு பதிலளித்ததாக நினைக்கிறேன். என்னிடம் பேசுவதற்கு அவர்களுக்கு ஒன்றும் இருக்கவில்லை. எனது சிறப்பான பந்துவீச்சுக்கு பின்னணியில் நிறைய கடின உழைப்பு இருக்கிறது. இந்திய அணி நிர்வாகம் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்தது. மிகவும் முக்கியமானப் போட்டியில் எனக்கு மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்தது. இறுதிப்போட்டி மிகவும் சிறப்பானதாக அமைந்தது என்றார்.

பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் திலக் வர்மா 53 பந்துகளில் 69* ரன்களும், ஷிவம் துபே 22 பந்துகளில் 33 ரன்களும் எடுத்தனர்.

Indian player Tilak Verma said that the Pakistani team players talked a lot and he responded to it with his batting.

இதையும் படிக்க: அணியில் சீக்கிரம் இடம்பிடித்திருந்தால் என்னுடைய ஆட்டம் மேம்பட்டிருக்காது: அபிஷேக் சர்மா

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து மேலுமொரு மே.இ.தீவுகள் வீரர் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்துவீச்சாளர் அல்சாரி ஜோசப் காயம் காரணமாக விலகியுள்ளார்.மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 ... மேலும் பார்க்க

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிரபல இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஓய்வு!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்து அணியின் பிரபல ஆல்ரவுண்டர் ஓய்வு பெறுவதாக இன்று (செப்டம்பர் 29) அறிவித்துள்ளார்.இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான கிறிஸ் வோக்ஸ், அவரது 15 ஆண்டுகால கி... மேலும் பார்க்க

அணியில் சீக்கிரம் இடம்பிடித்திருந்தால் என்னுடைய ஆட்டம் மேம்பட்டிருக்காது: அபிஷேக் சர்மா

இந்திய அணியில் சீக்கிரம் இடம்பிடித்திருந்தால் தன்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ள நேரம் கிடைத்திருக்காது என அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. துபையி... மேலும் பார்க்க

அறிவுறுத்துவதை பின்பற்றுகிறார் சூர்ய குமார்; கிரிக்கெட்டுதான் அவமரியாதை! பாகிஸ்தான் கேப்டன்

இந்திய கேப்டன் சூர்ய குமார் யாதவின் செயல்களால் எங்களுக்கு அல்ல, கிரிக்கெட்டுக்குதான் அவமரியாதை என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா தெரிவித்துள்ளார்.ஆசியக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் பாகி... மேலும் பார்க்க

ஆசியத் தொடர் சம்பளம் ராணுவத்துக்கு நன்கொடை! சூர்ய குமார்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தனக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை பஹல்காம் தாக்குதலில் பலியானோரின் குடும்பத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் நன்கொடையாக அளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அமைச்சர் கையில் கோப்பை வாங்க இந்தியா மறுப்பு! கையோடு எடுத்துச் சென்ற நிர்வாகம்!

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வியிம் கைகளில் இருந்து ஆசியக் கோப்பையை வாங்க முடியாது என இந்திய அணி வீரர்கள் மறுத்தனர். இதனால், அந்தக் கோப்பையை ஆசியக் கோப்பை நிர்வாகம் மீண்டும் எடுத்துச் செ... மேலும் பார்க்க