TVK Vijay rally stampede : காயமடைந்தவர்கள் Exclusive பேட்டி | Ground report
WhatsApp-க்குப் போட்டியாக களமிறங்கிய இந்தியாவின் 'Arattai App' - NO.1 இடம்பிடித்த சாதனை கதை!
ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் சமீபத்திய நிலைப்பாடுகள், செயல்பாடுகள் இந்தியாவிற்கு எதிராக மாறிவருகின்றன.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ட்ரம்ப், இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு, முக்கிய பொறுப்புகள் வழங்கக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். இதில் நகைச்சுவை என்னவென்றால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூகுள், மெட்டா, மைக்ரோசாஃப் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் அனைவரும் இந்தியர்களே. அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னணி நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளில் 70% இந்தியர்கள்தான்.

தொட்டுப் பார்த்தால் கொழுப்பு, வெட்டிப் பார்த்தாலும் ரத்தம்; தாவரத்திலிருந்து இறைச்சியா?
Made in India
இப்படியாக தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் சார்ந்த துறைகளில் இந்தியர்கள், தமிழர்கள் கோலோச்சி வந்துகொண்டிருக்கின்றனர். ஆனால், துரதிஷ்டவசமாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொழில்நுட்பப் பொருள்கள், மென்பொருள்கள் எல்லாம் அமெரிக்கா, சீனா போன்ற வெளிநாட்டு தயாரிப்புகளே.
நம் நாட்டிற்குத் தேவையான தொழில்நுட்பப் பொருள்கள், மென் பொருள்கள் அனைத்தையும் நாமே தயாரிக்கும் அளவிற்கு தன்னிறைவைப் பெற்று 'Made in India' வை நோக்கிமுன்னேற வேண்டும் என்பதே இந்தியாவின் அடுத்தக் கட்ட பாய்ச்சலாக இருக்க வேண்டும். அப்படியான ஒரு பாய்ச்சலுக்கு வலுசேர்க்க வந்திருக்கிறது இந்த தமிழ்நாட்டு 'அரட்டை ஆப் (Arattai).
Arattai App
சென்னையில் இயங்கிவரும் சோஹோ (Zoho) டெக் நிறுவனம் 2021ம் ஆண்டு அமெரிக்க 'வாட்ஸ்அப்' செயலிக்கு மாற்றாக நம் நாட்டின் தயாரிப்பான 'அரட்டை (Arattai) என்கிற சோஷியல் ஆப்பை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் சிறு சிறு டெக் பிரச்னைகள் இருந்தன, அவை டெவலப் செய்யப்பட்டு இப்போது முன்னணி டெக் ஆப்களுக்கு சவால்விடும் அளவிற்கு வந்திருக்கிறது.

இன்றைய முன்னணி 'What's app', 'Snap Chat உள்ளிட்ட ஆப்களில் இருக்கும் எல்லா வசதிகளும் இதில் சிறப்பாகவே இருக்கிறது. ஆப்பின் 'பயன்பாட்டுத் தளமும் UI' இலகுவாக இருப்பது கூடுதல் ப்ளஸாக இருக்கிறது. அதற்கும்மேலாக, தகவல் திருட்டுகள் ஏற்படா வகையில் இதை உருவாக்கியிருப்பதாகவும், டிஜிட்டல் பாதுகாப்பிற்கு முக்கியத்தும் அளித்திருப்பதாகவும் உறுதியளிக்கிறார்கள்.
அது இந்த 'அரட்டை' ஆப்பின் மீதான நம்பகத்தன்மையைக் கூட்டி, 3 நாள்களில் 35 லட்சம் பயன்பாட்டாளர்களைக் கொண்டு வரச் செய்திருக்கிறது.

சமீபத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்தியர்கள் உள்ளூர் டிஜிட்டல் தளங்களுக்கு மாற வேண்டும் என்றும் இந்திய தயாரிப்பான 'அரட்டை' ஆப்பை பயன்படுத்துங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதன்பிறகு கடகடவென பல லட்சம் பதிவிறக்கங்களைப் பெற்று இந்திய அளவில் ஆப் ஸ்டோரில் வாட்ஸ்அப்பை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்குச் சென்றிருக்கிறது.
வாட்ஸ்அப்பிற்குப் போட்டியாக களமிறங்கியிருக்கும் இந்த தமிழ்நாட்டு 'அரட்டை ஆப்'பை நெட்டிசன்கள் வைரல் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.