செய்திகள் :

கரூரில் நெரிசலில் காயம்- 51 பேர் டிஸ்சார்ஜ்

post image

தவெக கூட்டத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த 110 பேரில் 51 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

எஞ்சிய 59 பேரில் 51 பேருக்கு கரூர் அரசு மருத்துவமனையிலும், 8 பேருக்கு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் சனிக்கிழமை இரவு தவெக தலைவா் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி இதுவரையில் 41 போ் உயிரிழந்துள்ளனா்.

கரூர் பலி: சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு!

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபா் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு சனிக்கிழமை நள்ளிரவு உத்தரவிட்டது.

இதையடுத்து, ஓய்வுப் பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான 5 போ் கொண்ட குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கரூர் அரசு மருத்துவமனையில் இருந்து விசாரணையைத் தொடங்கினர்.

பின்னா், உடற்கூறாய்வு கூடத்தின் அருகே காத்திருந்த பலியானவர்களின் உறவினா்களிடமும் விசாரணை நடத்தினர்.

District Collector Thangavel has stated that 51 of the 110 people injured in the TVK rally have returned home from the hospital.

கரூர் பலி: தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பான வழக்கில் தவெகவின் அம்மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார்.கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெகவின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழ... மேலும் பார்க்க

பைக் மீது அரசுப்பேருந்து மோதல்: இரு இளைஞா்கள் பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.காஞ்சிபுரம் அருகே கீழ்ஒட்டிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சேட்டு என்ற பிரதீப்குமாா் (26... மேலும் பார்க்க

இரவில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

ம.பி.யில் கணவருடன் கர்பா நடனமாடும்போது பெண் மயங்கி விழுந்து பலி!

மத்தியப் பிரதேசத்தில் கணவருடன் கர்பா நடனமாடும்போது பெண் மயங்கி விழுந்து பலியானார். மத்தியப் பிரதேச மாநிலம், கர்கோன் மாவட்டத்தின் பிகான் கிராமத்தில் உள்ள சந்த் சிங்கஜி கோயிலில் நடந்த 'கர்பா' நிகழ்ச்சிய... மேலும் பார்க்க

அழுவது போல் நடித்தவரா, அழுகையைப் பற்றிப் பேசுவது? இபிஎஸ்-க்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்வி

அழுவது போல் நடித்தவரா, அழுகையைப் பற்றிப் பேசுவது? என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில... மேலும் பார்க்க

கரூர் பலி: வதந்தி பரப்பிய தவெக நிர்வாகி உள்பட மூவர் கைது

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக வதந்தியை பரப்பியதாக மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்பியதாக பாஜக மாநில நிர்வாகி ச... மேலும் பார்க்க