செய்திகள் :

`செந்தில் பாலாஜி சதியால் 41 பேர் இறப்பு; விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தயார்!'- தவெக வழக்கறிஞர்

post image

"முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்களால் விஜய்க்கு எதிராகவும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவும் மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டதால் 41 பேர் உயிரிழந்தனர்" என்று தவெக வழக்கறிஞர் அறிவழகன் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

கரூரில் நடந்த துயரமான சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தவெக சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை அக்டோபர் 3 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான அறிவழகன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் கலந்துகொண்ட பிரசாரக் கூட்டத்தின்போது போக்குவரத்தை காவல்துறை சீர் செய்யவில்லை, போதுமான காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவில்லை, இதனை பயன்படுத்திக்கொண்ட திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்களால் விஜய்க்கு எதிராகவும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவும் மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டுள்ளது,

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

கரூர் சம்பவத்தை மாநில காவல்துறை விசாரிக்கக் கூடாது, 41 பேர் உயிரிழந்ததை சிபிஐ விசாரிக்க வேண்டும், சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை அழித்து விடாமல் பாதுகாக்க வேண்டும், சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினரின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூற காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்கிற 3 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நாளை மனு தாக்கல் செய்ய உள்ளார்.

இவ்வழக்கு அக்டோபர் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கிறோம், இதுவரை நடைபெற்ற விஜய்யின் பிரசாரத்தில் காவல்துறை எங்கும் லத்தி சார்ஜ் செய்ததில்லை, இந்தக் கூட்டத்தில் காவல்துறை நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சதியால் கரூரில் 41 பேர் உயிரிழந்தனர், அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம், உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தால் விஜய் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற தயாராக உள்ளார், ஒரு நபர் விசாரணை ஆணையம் என்பது பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுடைய பிரச்னைகளை கேட்கும், ஆனால் புலன் விசாரணையில்தான் யார் சதி செயலில் ஈடுபட்டது என கண்டுபிடிக்க முடியும்.

கரூர்: விஜய்
கரூர்: விஜய்

வலிமையான அமைப்பாக உள்ள சிபிஐ இவ்வழக்கை விசாரிக்க வேண்டும். கரூரில் செந்தில் பாலாஜி குறித்து பேசிய உடன் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது, சதி வலையில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும், குழந்தைகள், பெண்கள் என 41 பேர் உயிரிழந்துள்ளனர், இவர்களின் மரணத்திலும் அரசியல் செய்யப்படுகிறது, அப்படி அரசியல் செய்பவர்கள் மனிதர்கள் கிடையாது, கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்வதற்கு காவல்துறை ஒரு நாளுக்கு முன்புதான் அனுமதி கொடுத்தது, துயர சம்பவத்திற்கு பிறகு காவல்துறை கொடுக்கும் விளக்கம் அவர்களுடைய பொறுப்பை தட்டிக் கழிப்பதாக உள்ளது,

பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கடமைகளில் இருந்து அரசு விலகிச் சென்றுள்ளது, காவல்துறை அளித்த நிபந்தனைகளை நாங்கள் மீறவில்லை, உயிரிழந்தவர்களின் உடல்களை உடனுக்குடன் உடற்கூறாய்வு செய்தது ஏன்? மருத்துவமனையில் ஏற்கனவே இறந்தவர்களின் உடல்கள் இவ்விவகாரத்துடன் சேர்க்கப்பட்டுள்ளதா என சந்தேகம் வருகிறது" என்றார்.

கரூர்: பவர் கட், கல்வீச்சு, மர்ம நபர்கள் தாக்குதல் - இதெல்லாம் நடந்ததா? உண்மை என்ன?

கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அசம்பாவிதம் நடந்ததற்கு சதிச் செயல் காரணமா என்ற விவாதம் சமூக ஊடகங்களில் நடக்கிறது. இந்த விவகாரத்த... மேலும் பார்க்க

காலனி: `சாதிய ஆதிக்கத்திலிருந்து கொஞ்சம் விடுபட்டு கொள்வோமே’ - அறிவிப்போடு நிற்கும் பெயர் மாற்றம்?

“இந்த பேரு எங்கள நிம்மதியாவே வாழ விடமாட்டுகுதுங்க... இங்க யாரும் வெளிப்படையா பேசுறதோ பழகுறதோ கிடையாது. யாரு? எந்த ஊரு? எந்த தெரு? எந்த ஆளுங்க? இந்த கேள்வி மட்டும்தான் இங்க எப்பவுமே இருந்துட்டு இருக்கு... மேலும் பார்க்க

`துயர சம்பவத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்' - கரூர் விவகாரம் குறித்து அன்புமணி ராமதாஸ்

”விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவுப்படுத்த வலியுறுத்தி குண்டாறு நதியை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார். மேலும் குண்டாறு செல்லும் வரத்து கால்வ... மேலும் பார்க்க

TVK Vijay Karur Stampede: Eyewitness interview - அதிர்ச்சியளிக்கும் வீடியோ ஆதாரம் | Ground report

கரூரில் நடந்த TVK விஜய் பேரணி அசம்பாவிதம் தொடர்ந்து உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வீட்டிற்கு நலமாக வந்த ஒருவர், காலையில் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவே அந்த அச... மேலும் பார்க்க

``ராகுல் காந்தியை சுடுவோம்'' -டிவி நிகழ்ச்சியில் பேசிய பா.ஜ.க தலைவர்; அமித் ஷாவிற்கு காங்., கடிதம்

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து ஓட்டுத் திருட்டு தொடர்பான பிரச்னையை கிளப்பி வருகிறார். இதற்கு தேர்தல் கமிஷன் தொடர்ந்து விளக்கம் கொடுத்து வருகிறது. இதனால் பா.ஜ.க தலைவர்களும் ரா... மேலும் பார்க்க

இத்தாலி பிரதமரின் புத்தகம்: `மிகச் சிறந்த தேச பக்தர் மெலோனி' - பிரதமர் மோடியின் முன்னுரை

இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் சுயசரிதையான "ஐ ஆம் ஜியோர்ஜியா - மை ரூட்ஸ், மை பிரின்சிபிள்ஸ்" என்ற புத்தகம் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தின் இந்திய பதிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலைய... மேலும் பார்க்க