செய்திகள் :

காஷ்மீர்: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு 7 சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு

post image

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த ஏழு சுற்றுலா தலங்களை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் திங்கள்கிழமை மீண்டும் திறந்தது.

முன்னதாக வெள்ளிக்கிழமை நடந்த ஒருங்கிணைந்த தலைமையகக் கூட்டத்தில் முழுமையான பாதுகாப்பு மறுஆய்வு குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்திற்குப் பிறகு துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா பிறப்பித்த உத்தரவின் பேரில் சுற்றுலா தலங்கள் திங்கள்கிமை திறக்கப்பட்டன.

பிகாரில் முதல்வரின் சொந்த மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் காயம்

இதுகுறித்து துணைநிலை ஆளுநா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக தற்காலிகமாக மூடப்பட்ட காஷ்மீர் மற்றும் ஜம்மு பிரிவுகளில் உள்ள கூடுதல் சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 50 சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.

ஏற்கெனவே ஜூன் மாதத்தில் பஹல்காமின் சில பகுதிகள் உள்பட 16 சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஏழு சுற்றுலா தலங்களை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் திறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The Jammu and Kashmir administration on Monday threw open seven tourist spots in the valley that were closed in the wake of the April 22 Pahalgam terror attack.

இத்தாலி பிரதமர் மெலோனி சுயசரிதைக்கு பிரதமர் மோடி முன்னுரை!

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதைக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதியுள்ளார்.இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதையின் இந்தியப் பதிப்புக்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதியுள்ளதாகத... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல்: 8 பேர் கொண்ட குழுவை அமைத்த பாஜக!

கரூர் கூட்ட நெரிசலுக்கான காரணத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் குழுவை அமைத்துள்ளதாக பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

லடாக் வன்முறை: லேயில் 6-ஆவது நாளாக ஊரடங்கு நீட்டிப்பு

வன்முறை போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் 6-ஆவது நாளாக திங்கள்கிழமையும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுயில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள... மேலும் பார்க்க

பிகாரில் முதல்வரின் சொந்த மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் காயம்

பிகாரில் முதல்வர் நிதீஷின் சொந்த மாவட்டத்தில் கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்தனர். பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் சொந்த மாவட்டமான நாளந்தாவில் கட்டுமானத்தில் இருந்த... மேலும் பார்க்க

மேற்கு வங்காளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 3 பேர் பலி

மேற்கு வங்கத்தில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி பெண் உள்பட 3 பேரி பலியாகினர். மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஷ்யாம்நகர் நிலையம் அருகே சனிக்கிழமை இரவு தண்டவாளத்தை ... மேலும் பார்க்க

பிகாரில் 3 அம்ரித் பாரத், 4 பயணிகள் ரயில் சேவை தொடக்கம்: அஸ்வினி வைஷ்ணவ்

பிகாரில் மூன்று அம்ரித் பாரத் ரயில்களையும், நான்கு புதிய பயணிகள் ரயில்களையும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். தர்பங்காவிலிருந்து அஜ்மீர் வரையிலான அம்ரித் ப... மேலும் பார்க்க