செய்திகள் :

கரூர் பலி: விஜய் இன்று முக்கிய ஆலோசனை! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

post image

கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய் இன்று(செப். 29) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

கரூர் சம்பவம் நடைபெற்ற சனிக்கிழமை இரவு முதல், கடந்த 36 மணிநேரமாக நீலாங்கரை வீட்டிலேயே தங்கியிருந்த விஜய், இன்று காலை 10 மணியளவில் நீலாங்கரை வீட்டில் இருந்து பட்டினம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார்.

இதனைத் தொடர்ந்து, பட்டினப்பாக்கம் இல்லத்திலிருந்து, இன்று மாலை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்துக்கு விஜய் செல்லவுள்ளார்.

அங்கு, தவெகவின் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெகவின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

கரூர் சம்பவம் நடைபெற்று முதல்முறையாக விஜய் தவெக தலைமை அலுவலகம் செல்லவுள்ளது அரசியலில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: உடல்கூராய்வு மோசடி! கொலையாளிகளுக்கு உதவும் கும்பல்! ஒரு பொய் ரிப்போர்ட் ரூ.50,000

The Tvk leader will hold consultations today (Sept. 29) regarding the incident in which 41 people died in a stampede at Vijay's campaign rally in Karur.

கரூரில் நெரிசலில் காயம்- 51 பேர் டிஸ்சார்ஜ்

தவெக கூட்டத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த 110 பேரில் 51 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். எஞ்சிய 59 பேரில் 51 பேருக்கு கரூர் அரசு மருத்... மேலும் பார்க்க

கரூர் பலி: சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களின் மூலமாக வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.கரூரில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்ற... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினின் விடியோதான் பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது: இபிஎஸ்

முதல்வர் ஸ்டாலினின் விடியோதான் பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதல... மேலும் பார்க்க

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,140 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,140 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவது மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 வாரங்களாக தங்கம், வெள்... மேலும் பார்க்க

தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு சிறப்பு மின்சார ரயில்கள்

கிளாம்பாக்கத்தில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆயுத பூஜை (புதன்), காந்தி ஜெயந்தி (வியாழன்) விடுமுறையைத் தொடர்ந்து வார ... மேலும் பார்க்க

யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை! நிர்மலா சீதாராமன்

கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை என்று மத்திய நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.கரூர் விஜய் பிரசாரக் கூட்டநெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரையும், மருத்து... மேலும் பார்க்க