செய்திகள் :

நடிகர் மோகன் லாலுக்கு பிரமாண்ட பாராட்டு விழா! கேரள அரசு அறிவிப்பு!

post image

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மலையாள நடிகர் மோகன் லாலுக்கு, வரும் அக்டோபர் 4 ஆம் தேதி பிரமாண்ட பாராட்டு விழா நடத்தப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

71 ஆவது தேசிய விருது விழாவில், மலையாள நடிகர் மோகன் லாலுக்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நடிகர் மோகன் லாலை கௌரவிக்கும் விதமாக, கேரள அரசின் சார்பில் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி “மலையாளம் வனோலம், லால்சலாம்” எனும் பெயரில் பிரமாண்ட பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவில், கேரள முதல்வர் பினராயி விஜயன், கலாசார விவகாரத் துறை அமைச்சர் சஜி செரியன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் மோகன் லாலை சிறப்பிக்கும் இந்த விழாவிற்கான இலச்சினை, நேற்று (செப். 29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

மேலும், 100 ஆண்டுகளைக் கடந்த மலையாள திரையுலகில் நடிகர் மோகன் லால் 50 ஆண்டுகள் சிறப்பாகப் பங்காற்றியுள்ளதாக கேரள கலாசார விவகாரத் துறை அமைச்சர் சஜி செரியன் கூறியுள்ளார்.

இத்துடன், முக்கிய நடிகர்கள், அரசியல் தலைவர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்தப் பாராட்டு விழாவில் நடிகைகள் ஊர்வசி, ஷோபனா, மஞ்சு வாரியர், பார்வதி, கார்த்திகா, மீனா, நித்யா மெனன், லிஸ்ஸி மற்றும் பாடகர்கள் சுஜாதா மோகன், சுவேதா மோகன், சித்தாரா கிருஷ்ணகுமார், ஆர்யா தயாள், மஞ்சாரி, ஜோட்ஸ்னா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி - டிரம்ப் அறிவிப்பு

The Kerala government has announced that a grand felicitation ceremony will be held on October 4 for Malayalam actor Mohanlal, who received the Dadasaheb Phalke Award.

இட்லி கடை மேக்கிங் விடியோ!

நடிகர் தனுஷின் இட்லி கடை மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான இட்லி கடை நாளை (அக். 1) ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அருண் விஜய், நித்யா மெனன், ராஜ்கிரண் உள்ளிட்டோர... மேலும் பார்க்க

புதிய தயாரிப்பு நிறுவனம் துவங்கும் சூர்யா?

நடிகர் சூர்யா புதிதாகத் தயாரிப்பு நிறுவனம் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் அடுத்தாண்டு வெளியாகவுள்ளது. தற்போது, இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் தன்... மேலும் பார்க்க

வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி - டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவிகித வரி விதிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக, சமூக வலைதளத்தில் டிரம்ப் கூறியதாவது,``ஒரு குழந்தையிடமிருந்து மி... மேலும் பார்க்க

20களுக்கும் 30களுக்கும் வித்தியாசம் என்ன? சமந்தா எழுதிய கவிதை!

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இருபதுகளில் இருந்து முப்பது என்பது எந்தவகையில் மாறுபட்டதாக உள்ளது என்பதை கவிதையாக சமந்தா எழுதியுள்ளார். இருபதுகளின் வேகத்தில் தொலைத்த காலம், இன்பம், குடும்ப நேரம் என பலவற்றைய... மேலும் பார்க்க