வயநாடு நிலச்சரிவு! மத்திய அரசு அனுமதித்த ரூ.260 கோடி நிதியுதவியை வழங்கவில்லை! - ...
ஆயுத பூஜை: அனல் பறக்கும் பூக்கள் விலை!
ஆயூத பூஜை, விஜய தசமியை ஓட்டி தஞ்சை பூச்சந்தையில் பூக்களின் விலை வழக்கத்தை விட நான்கு மடங்கு உயர்ந்து உள்ளது.
விழாக் காலம் என்பதால், விலை அதிகமாக இருந்தாலும், குறைவான அளவில் மக்கள் பூக்களை வாங்கிச் செல்கின்றனர்.
தமிழகம் முழுவதும் நாளையும் நாளை மறுநாளும் ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி பண்டிகைகள் கொண்டாடப்படவிருக்கிறது. இதனால், சந்தையில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது.
தஞ்சை பூச்சந்தைக்கு தேனி, திண்டுக்கல், உசிலம்பட்டி, கும்பகோணம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது. ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர்ந்து விழா காலமாக இருப்பதால் பூக்களின் தேவை முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை அடுத்து, பூக்களின் விலை வழக்கத்தை விட நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. மல்லிகை 800 ரூபாய், செவ்வந்தி 200 ரூபாய் அரளி 500 ரூபாய், ஆப்பிள் ரோஸ் 150 ரூபாய், பன்னீர் ரோஸ் 150 என விற்கப்படுகிறது.
அத்தியாவசியமாக பூக்கள் இருப்பதால், விலை ஏற்றத்தை கருத்தில் கொண்டு குறைவான அளவில் பூக்களை வாங்கிச் செல்கின்றனர்.