கைதி - 2 நிலைமை என்ன?
கார்த்தி நடிக்கவுள்ள கைதி - 2 திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தி கூட்டணியில் உருவான கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது. இப்படத்திற்குப் பின்பே லோகேஷ் கனகராஜ் பிரபலமடைந்தார். தொடர்ந்து, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கினார்.
இறுதியாக, ரஜினிகாந்த்தை வைத்து இயக்கிய கூலி மோசமான விமர்சனங்களையே பெற்றது. இதனால், லோகேஷின் அடுத்தடுத்த படங்களின் மீதிருந்த எதிர்பார்ப்பு குறைந்துள்ளது.
அடுத்ததாக, நடிகர் கார்த்தியை வைத்து கைதி - 2 திரைப்படத்தை எடுக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருந்தார். ஆனால், கூலியின் எதிர்மறை விமர்சனங்களால் அப்படத்திற்கு வலுவான கதை வேண்டும் என்கிற சூழலுக்கு லோகேஷ் தள்ளப்பட்டுள்ளார்.
இதனால், இந்த டிசம்பர் மாதம் துவங்க இருந்த கைதி - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவங்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இக்கூட்டணி இணைந்தால் கைதி - 2 திரைப்படம் 2027 ஆம் ஆண்டுதான் துவங்கும்!
இதையும் படிக்க: கைவிடப்படும் வாடிவாசல்?