கைவிடப்படும் வாடிவாசல்?
வாடிவாசல் திரைப்படம் கைவிடப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் வாடிவாசல் திரைப்படம் உருவாகவுள்ளது. மறைந்த எழுத்தாளர் சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலைத் தழுவியே இப்படம் உருவாகிறது.
கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதல்கட்ட பணிகள் ஆரம்பமானதும் ஜூன் மாதம் படப்பிடிப்பும் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் தாணு, “வாடிவாசல் படத்திற்கான அனிமேஷன் பணிகள் முடிந்ததும் படப்பிடிப்பு கண்டிப்பாக துவங்கும்.” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இப்படம் உருவாக அடுத்த சில ஆண்டுகள் வாய்ப்பில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காரணம், விடுதலை - 2 திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் வெற்றி மாறன் நடிகர் சிம்புவை வைத்து கேங்ஸ்டர் படத்தை இயக்குகிறார். இது 2027-ல் தான் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, வெற்றி நடிகர் தனுஷுடன் வடசென்னை - 2 படத்திற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சூர்யாவும் வெங்கட் அட்லூரி, ஜித்து மாதவன், பா. இரஞ்சித் என அடுத்தடுத்த இயக்குநர்களுடன் இணைகிறார். இதனால், வாடிவால் அடுத்த சில ஆண்டுகளுக்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
இதையும் படிக்க: புதிய தயாரிப்பு நிறுவனம் துவங்கும் சூர்யா?