செய்திகள் :

கார்த்திகை தீபம் தொடரில் இணையும் கீர்த்தனா!

post image

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் கார்த்திகை தீபம் தொடரில் நடிகை கீர்த்தனா பொதுவல் இணையவுள்ளார்.

நினைத்தேன் வந்தாய் தொடரில் நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்த கீர்த்தனா, தற்போது கார்த்திகை தீபம் தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கார்த்திகை தீபம் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

கார்த்திக் ராஜு நாயகனாகவும், ரேவதி நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் அழுத்தமான துணை கதாபாத்திரங்களும் நடிக்கின்றனர். ராஜேஷ், தமிழ்ச்செல்வி, மீரா கிருஷ்ணா, ஜனனி, விசித்ரா, விஜே ரேஷ்மா, ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோரின் நடிப்பு பெரும் பலமாக உள்ளது.

நகரத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வந்த இந்தத் தொடர், தற்போது கிராமத்துப் பின்னணியை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தத் தொடரில் தற்போது கீர்த்தனா பொதுவலும் இணைந்துள்ளார். இவரின் வருகையால் கார்த்திகை தீபம் தொடரில் பல முக்கிய திருப்பங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

திருமதி ஹிட்லர் தொடரில் கவனம் பெற்ற கீர்த்தனா, நினைத்தேன் வந்தாய் தொடரில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது கார்த்திகை தீபம் தொடரில் இவரின் நடிப்புக்காக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிக்க |ஸ்ரீமத் ராமாயணம் தொடரின் குழந்தை நட்சத்திரம் பலி!

Actress Keerthana Podhuval act in Karthigai Deepam

விஷ்ணு விஷாலின் ஆர்யன் டீசர்!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான ஆர்யன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.இயக்குநர் பிரவீன் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்துள்ள ஆர்யன் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திர... மேலும் பார்க்க

ஜிவி பிரகாஷ் - சைந்தவிக்கு விவாகரத்து!

இசையமைப்பாளா் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவிக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷும் பாடகி சைந்தவியும் கருத்து வேறுபாட்டின் கா... மேலும் பார்க்க

தெலுங்கு புரமோஷனில் கன்னடம்... விமர்சனத்திற்கு ஆளான ரிஷப் ஷெட்டி!

காந்தாரா சேப்டர் 1 தெலுங்கு புரமோஷனில் நடிகர் ரிஷப் ஷெட்டி கன்னடத்தில் பேசியது விமர்சிக்கப்பட்டு வருகிறது.நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படமான காந்தாரா சேப்டர் 1 வருகிற அக்டோபர் 2 ஆ... மேலும் பார்க்க

ஸ்ரீமத் ராமாயணம் தொடரின் குழந்தை நட்சத்திரம் பலி!

ஸ்ரீமத் ராமாயணம் தொடரில் நடித்து புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரமான வீர் ஷர்மா தனது வீட்டில் நேர்ந்த தீ விபத்தில் மூச்சுத் திணறி உயிரிழந்தார். இந்த தீ விபத்தில் வீர் ஷர்மாவின் சகோதரர் செளர்யா ஷர்மாவும் ... மேலும் பார்க்க

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வழிபட உகந்த நேரம்!

2025 ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரத்தை தினமணியின் இணையதள ஜோதிடர் ராமராமானுஜ தாசன் தெரிவித்துள்ளார்.கல்விக்கு அதிபதியும், நம் தொழிலுக்கும், ஜீவனத்திற்கும் துணை புரியும் கருவிகளை வைத்து சரஸ்வத... மேலும் பார்க்க